உப்புமா சரியில்லை என கூறியதால் அடி–உதை சேலம் சிறைக்காவலர்கள் மீது ஆயுள் தண்டனை கைதி புகார்


உப்புமா சரியில்லை என கூறியதால் அடி–உதை சேலம் சிறைக்காவலர்கள் மீது ஆயுள் தண்டனை கைதி புகார்
x
தினத்தந்தி 30 Dec 2016 10:56 PM IST (Updated: 30 Dec 2016 10:56 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வன். ஆயுள் தண்டனை கைதியான இவர், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த மாதம் அங்கிருந்து சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் வழங்கப்பட்ட உப்புமாவை சாப்பிட்ட கைதி ச

சேலம்,

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வன். ஆயுள் தண்டனை கைதியான இவர், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த மாதம் அங்கிருந்து சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் வழங்கப்பட்ட உப்புமாவை சாப்பிட்ட கைதி செல்வன், உப்புமா சரியில்லை என்றும், எண்ணெய் அதிகம் இருப்பதாகவும் கூறி தகராறில் ஈடுபட்டதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த சிறைக்காவலர்கள் கைதி செல்வனை அடித்து உதைத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை தன்னுடைய மனைவி எவிலின் ஜெனிலியாவிடம் போன் மூலம் செல்வன் தெரிவித்தார். இதையடுத்து ஜெனிலியா, தனது கணவருக்கு கொடுமைகள் நடப்பதாக கூறி, அவரை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என சேலம் கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். இதையடுத்து சேலம் 3–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சண்முகப்பிரியா, இந்த வழக்கு சம்பந்தமாக கோர்ட்டில் கைதி செல்வனை ஆஜர்படுத்த உத்தரவிட்டார். மேலும், அன்றைய தினம் ஜெனிலியா ஆஜராகவும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இந்தநிலையில், நேற்று காலை சேலம் மத்திய சிறையில் இருந்து கைதி செல்வனை சிறைக்காவலர்கள் அழைத்து வந்து சேலம் 3–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரிடம், மாஜிஸ்திரேட்டு சில கேள்விகளை கேட்டார். பிறகு சிறையில் தன்னை காவலர்கள் தாக்கியதாகவும், உடனடியாக மருத்துவ சிகிச்சை தனக்கு தேவை என கைதி செல்வன் கண்ணீர் விட்டு கதறியதாகவும் தெரிகிறது. அப்போது அவரது வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட்டு பதிவு செய்து கொண்டார். பின்னர், செல்வன் மீண்டும் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து சிறை அதிகாரிகளிடமும் மாஜிஸ்திரேட்டு விசாரிக்க உள்ளதாகவும், அதன்பிறகே கைதி செல்வன் வேறு சிறைக்கு மாற்றப்படுவாரா? என்பது தெரியவரும்.


Next Story