சேலத்தில் பள்ளி மாணவியிடம் வாலிபர் சில்மிஷம் போலீசார் விசாரணை
சேலம் பஞ்சதாங்கி ஏரி பகுதியை சேர்ந்த 13 வயது கொண்ட பள்ளி மாணவி ஒருவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஜெயவேல் (வயது 28) என்பவர், அந்த மாணவியை வலுக்கட்டாயமாக அங்குள்ள ஒரு கழிவறைக்கு அழைத்து சென்றார். பின்
சேலம்,
சேலம் பஞ்சதாங்கி ஏரி பகுதியை சேர்ந்த 13 வயது கொண்ட பள்ளி மாணவி ஒருவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஜெயவேல் (வயது 28) என்பவர், அந்த மாணவியை வலுக்கட்டாயமாக அங்குள்ள ஒரு கழிவறைக்கு அழைத்து சென்றார். பின்னர், அவர் அந்த மாணவியிடம் தவறாக நடக்க முயன்று, சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த மாணவி சத்தம் போட்டு கூச்சலிட்டதும், அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக கழிவறைக்குள் சென்றனர். உடனே அங்கிருந்த வாலிபர் ஜெயவேலை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர், அவர் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக ஜெயவேல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.