கடலூரில் பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டம் தரமான சாலை அமைக்க கோரி நடந்தது


கடலூரில் பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டம் தரமான சாலை அமைக்க கோரி நடந்தது
x
தினத்தந்தி 31 Dec 2016 12:57 AM IST (Updated: 31 Dec 2016 12:57 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஜவான்பவன்– கம்மியம்பேட்டையை இணைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை கடந்த மழை வெள்ளத்தின் போது சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறி விட்டது. இதையடுத்து அந்த சாலையை சீரமைக்க ரூ.99 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்ப

கடலூர்,

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஜவான்பவன்– கம்மியம்பேட்டையை இணைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை கடந்த மழை வெள்ளத்தின் போது சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறி விட்டது. இதையடுத்து அந்த சாலையை சீரமைக்க ரூ.99 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிதியில் இருந்து சாலையை தரமாக சீரமைக்காததால் தற்போது மீண்டும் குண்டும், குழியுமாக மாறி விட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகவே இந்த சாலையை சீரமைத்ததில் ஊழல் நடந்துள்ளது. இது பற்றி உரிய விசாரணை நடத்தி, தரமான சாலை அமைக்க கோரி கடலூர் அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று ஜவான்பவன் சாலையில் குண்டும், குழியுமாக இடத்தில் எச்சரிக்கை விளம்பர பதாகைகளை கையில் ஏந்தியபடி நூதன போராட்டம் நடத்தினர்.

இதற்கு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் நிஜாமுதீன் தலைமை தாங்கினார். இதில் இணை ஒருங்கிணைப்பாளர்கள் குமார், பண்டரிநாதன், மருதவாணன், நிர்வாகிகள் வக்கீல் திருமார்பன், மன்சூர், சண்முகம், அருள்செல்வம், அப்பாஜி, கஞ்சமலை, ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story