ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த வழக்கில் 6 பேர் கைது
ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.5 லட்சம் கொடுத்தார் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 45). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் கெருகம்பாக்கத்தை சேர்ந்த செல்வம். கேட்ட
பூந்தமல்லி,
ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரூ.5 லட்சம் கொடுத்தார்சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 45). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் கெருகம்பாக்கத்தை சேர்ந்த செல்வம். கேட்டரிங் தொழில் செய்து வருகிறார்.
செல்வம், யுவராஜிடம் ‘‘தனக்கு தெரிந்த நபர் ஒருவரிடம் ரூ.5 லட்சம் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கொடுத்தால், அதற்கு பதிலாக பழைய ரூபாய் நோட்டுகள் 5 லட்சத்து 40 ஆயிரம் அவர் தருவார் என கூறினார்.
இதனை தொடர்ந்து யுவராஜ் கெருகம்பாக்கத்தை அடுத்த தரப்பாக்கம் அருகே கடந்த 27–ந்தேதி புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அடங்கிய ரூ.5 லட்சத்தை செல்வம் மற்றும் அவரது நண்பர்களிடம் கொடுத்தார்.
ஏமாற்றினார்கள்அதனை வாங்கிய செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் அதற்கு பதிலாக ஒரு பையில் ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் இருப்பதாக கூறி அதனை கொடுத்து சென்றனர்.
சிறிது நேரம் கழித்து யுவராஜ் அந்த பையை திறந்து பார்த்தபோது, அதில் கற்கள் இருப்பது தெரியவந்தது.
தான் ஏமாற்றப்பட்டத்தை உணர்ந்த யுவராஜ் இது குறித்து குன்றத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார், குற்றவாளிகளை தேடி வந்தனர்.
6 பேர் கைதுஇந்தநிலையில் போலீசார் தலைமறைவாக இருந்த செல்வத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் ‘‘யுவராஜ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததால் அவரிடம் அதிக அளவில் பணம் இருந்தது. எனவே அவரிடம் ஆசை வார்த்தை கூறி பணம் பறிக்க முயற்சி செய்தோம்.
புதிய ரூபாய் நோட்டுகள் என்பதால் அவர் போலீசிடம் புகார் ஏதும் அளிக்க முடியாது என நினைத்தோம். ஆனால் அவர் போலீசில் புகார் அளித்ததால் மாட்டிக் கொண்டோம்’’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் செல்வத்தின் நண்பர்களான கதிர்(29), பாலா(45), வெங்கடேசன்(22), தினேஷ் (26), பாஸ்கர்(21), ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இதில் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.