விடுதி உரிமையாளர் வீட்டில் 37 பவுன் நகை, பணம் கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
நெகமம், தந்தை மீது இருந்த ஆத்திரத்தில் பள்ளி மாணவனை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். தொழிலாளி புதுக்கோட்டை மாவட்டம், வாருப்பட்டியை சேர்ந்தவர் செல்வன். அவருடைய மனைவி கவிதா. இவர்களுக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர். செல்வன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கு
நெகமம்,
தந்தை மீது இருந்த ஆத்திரத்தில் பள்ளி மாணவனை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தொழிலாளி
புதுக்கோட்டை மாவட்டம், வாருப்பட்டியை சேர்ந்தவர் செல்வன். அவருடைய மனைவி கவிதா. இவர்களுக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர். செல்வன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குடும்பத்துடன் நெகமம் அருகே என்.சந்திராபுரம் வந்தார். அவர் அங்குள்ள மட்டை மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். செல்வனின் 2-வது மகன் மனோஜ் (வயது 8) அங்குள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான்.
செல்வன் வேலை செய்து வரும் மில்லில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (22) என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார். பாலமுருகன் அவரது பெரியப்பா வீட்டில் இருந்த தினமும் வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பாலமுருகன் இருக்கும் வீட்டிற்கு செல்வன் சென்று உள்ளார். அப்போது செல்வன் காலில் செருப்புடன் வீட்டுக்குள் சென்றுள்ளார். இதை பாலமுருகன் தட்டி கேட்டுள்ளார். இதில் இரண்டு பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
சிறுவன் கடத்தல்
இந்த நிலையில், கடந்த 28-ந் தேதி செல்வனின் மகன் மனோஜ் முடிவெட்டுவதற்காக அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தான். அப்போது அங்கு பாலமுருகன் தனது நண்பர் ஸ்ரீநாத் என்பவரின் மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் அவர் மனோஜிடம் மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சிக்கு செல்லலாம் என்று கூறி கடத்தி சென்றார். வெகுநேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் பெற்றோர் பல இடங்களில் தேடியும் மனோஜை காண வில்லை. இது குறித்த புகாரின் பேரில் நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர். இதில் மனோஜை, பாலமுருகன் கடத்திச் சென்றது தெரியவந்தது.
மீட்பு
உடனே போலீசார் பாலமுருகனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு மனோஜ் பற்றி விசாரித்தனர். அப்போது அவர் மனோஜை, உசிலம்பட்டிக்கு கடத்தி சென்றதாக தெரிவித்தார். இதையடுத்து நெகமம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் உசிலம்பட்டி சென்று நேற்று முன்தினம் இரவு மனோஜை மீட்டனர். மேலும், பாலமுருகனையும் நெகமத்துக்கு அழைத்து வந்தனர்.
இது குறித்து நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகசுந்தரம், சிறுவனை கடத்தியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தார்.
மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், செல்வன் மீது இருந்த ஆத்திரத்தில் அவருடைய மகன் மனோஜை கடத்தி சென்றதாகவும், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை தனது நண்பர் ஸ்ரீநாத்திடம் திருப்பி கொடுக்க ரூ.30 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று பேரம் பேசியதாகவும் கூறினார். பாலமுருகன் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. பள்ளி சிறுவன் கடத்தப்பட்டு 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story