பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் மாற்றும் காலஅவகாசம் முடிந்தது ஊட்டி, குன்னூரில் வங்கிகளில் அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்
ஊட்டி, பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கியில் செலுத்துவதற்கான காலஅவகாசம் நேற்றுடன் முடிந்தது. இதனால் நேற்று ஊட்டி, குன்னூரில் உள்ள வங்கிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. காலஅவகாசம் முடிந்தது மத்திய அரசு பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. இதனை தொடர்
ஊட்டி,
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கியில் செலுத்துவதற்கான காலஅவகாசம் நேற்றுடன் முடிந்தது. இதனால் நேற்று ஊட்டி, குன்னூரில் உள்ள வங்கிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
காலஅவகாசம் முடிந்தது
மத்திய அரசு பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. இதனை தொடர்ந்து அந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் வைப்புதொகையாக செலுத்த வேண்டும் என்று அறிவித்தது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் தங்களிடம் இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி வந்தனர். இந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்துவதற்கான காலஅவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் பொதுமக்கள் தங்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை செலுத்த நேற்று ஊட்டியில் உள்ள வங்கிகளில் குவிந்தனர். மேலும் வங்கிகளில் பணம் எடுப்பதற்காக தொடர்ந்து நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்து நிற்கும் அவலமும் ஏற்பட்டது.
பணத்தட்டுப்பாடு
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம்.கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பூட்டியே கிடக்கிறது. கிராமப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பணத்தட்டுப்பாடு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும் ஏற்பட்டு உள்ளது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) புத்தாண்டு பிறக்கிறது. இந்த புத்தாண்டை கொண்டாட பொதுமக்கள் தயாராகி உள்ள நிலையில் பணத்தட்டுப்பாடு காரணமாக எந்த பொருளையும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் ஏ.டி.எம்.களிலும் பணம் இல்லை. வங்கிக்கு நேரில் சென்றாலும் ரூ.6 ஆயிரத்திற்கும் மேல் அதிகாரிகள் பணம் தருவது இல்லை. இதன்காரணமாக புத்தாண்டை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி ஏ.டி.எம்.களில் போதிய அளவு பணம் வைக்க அரசு மற்றும் வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு உள்ளது.
போலீஸ் பாதுகாப்பு
மேலும் குன்னூர், அருவங்காடு, கொலக்கம்பை, ஆருகுச்சி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வங்கிகளிலும் நேற்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. காலை நேரத்திலேயே வங்கிக்கு முன்பு நீண்ட வரிசையில் காத்து நின்றனர். பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காகவும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) புத்தாண்டு பிறக்க இருப்பதால் அதை கொண்டாடுவதற்கு பணம் எடுப்பதற்காகவும் கூட்டம் அலைமோதியது. வங்கிகள் முன்பு கூட்டம் அலைமோதியதால் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறிய தாவது:-
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த காலஅவகாசம் இன்று (நேற்று) கடைசி நாள் என்பதால் வங்கிகளில் கூட்டம் அலைமோதியது. வங்கி கணக்கில் செலுத்தப்படும் பழைய ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய 2 ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதில்லை. ரூபாய் நோட்டு மாற்றுபவர்களுக்கும், பணம் எடுப்பவர்களுக்கும் ஒரே வரிசை என்பதால் வங்கி முன் பல மணி நேரம் காத்து நிற்க வேண்டிய அவல நிலை உள்ளது. வங்கி கணக்கில் பணம் இருந்தும் புத்தாண்டை குழந்தைகளுடன் சந்தோஷமாக கொண்டாட பணம் எடுக்க முடியவில்லை. ஊட்டியில் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பூட்டப்பட்டு உள்ளன. இங்கு சுற்றுலா வரும் பயணிகள் பணம் இல்லாமல் ஒவ்வொரு ஏ.டி.எம்.
மையங்களை தேடி அலைவது வேதனை அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகங்கள் வருகிற புத்தாண்டு முதல் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் அவர்கள் தேவைக்கு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இந்த விஷயத் தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story