நீலகிரி மாவட்டத்தில் ரேஷன்கார்டுகளில் உள்தாள்கள் இணைக்கும் பணி அடுத்தவாரம் தொடங்கும் அதிகாரி தகவல்
ஊட்டி, நீலகிரி மாவட்டத்தில் ரேஷன்கார்டுகளில் உள்தாள்கள் இணைக்கும் பணி அடுத்த வாரம் தொடங்கும் என்று அதிகாரி தெரிவித்து உள்ளார். ஒரு ஆண்டுக்கு நீடிப்பு ‘ஸ்மார்ட் கார்டு’ பணி இன்னும் முடிவடையாததால் ரேஷன்கார்டுகள் செல்லத்தக்க காலத்தை மேலும்
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ரேஷன்கார்டுகளில் உள்தாள்கள் இணைக்கும் பணி அடுத்த வாரம் தொடங்கும் என்று அதிகாரி தெரிவித்து உள்ளார்.
ஒரு ஆண்டுக்கு நீடிப்பு
‘ஸ்மார்ட் கார்டு’ பணி இன்னும் முடிவடையாததால் ரேஷன்கார்டுகள் செல்லத்தக்க காலத்தை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து அனைத்து மாவட்டத்திற்கும் ரேஷன்கார்டில் இணைக்க உள்தாள்கள் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தந்த மாவட்ட உணவு வழங்கல் அதிகாரிகள் உள்தாள்களை அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
நீலகிரி மாவட்டத்தில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேஷன்கார்டுகள் உள்ளன. இதில் 32 ஆயிரம் ரேஷன்கார்டுகளில் ஆதார் எண்கள் இணைக்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் கள ஆய்வு செய்து, தணிக்கை பணி மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே ரேஷன்கார்டுகளுக்கு உள்தாள் இணைக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளதால் அதற்கான பணியில் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை இன்னும் ரேஷன்கார்டுகளில் இணைக்கப்பட இருக்கும் உள்தாள்கள் வந்து சேரவில்லை.
நாளை(ஞாயிற்றுக்கிழமை) புத்தாண்டு பிறக்க இருக்கிறது. இந்த நிலையில் 2017-ம் ஆண்டுக்கான உள்தாள்கள் எப்போது ரேஷன்கார்டுடன் இணைக்கப்படும் என்ற விவரம் குறித்து ஊட்டியில் உள்ள குடிமை பொருள் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
32 ஆயிரம் ரேஷன்கார்டுகள் நிறுத்தி வைப்பு
நீலகிரி மாவட்டம் முழுவதும் மொத்தம் 2 லட்சத்து 21 ஆயிரத்து 465 ரேஷன்கார்டுகள் உள்ளன. மேலும் ரேஷன்தாரர்களுக்கு பொருட்கள் வழங்குவதற்காக 404 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் அரசு உத்தரவுபடி 93 ஆயிரத்து 313 பேர் மட்டுமே ஆதார் எண் குறித்த தகவல்களை முழுமையாக பதிவு செய்து உள்ளனர். மேலும் 95 ஆயிரத்து 863 பேர் பகுதியாக தங்களது ஆதார் விவரங்களை பதிவு செய்து உள்ளனர்.
ஆனால் 32 ஆயிரம் பேர் தங்களது ஆதார் எண் குறித்த எந்தவொரு தகவலையும் பதிவு செய்யவில்லை. இதனால் அந்த 32 ஆயிரம் பேரின் ரேஷன் கார்டுகளின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
அடுத்த வாரம் பணி தொடங்கும்
தற்போது தமிழக அரசு ரேஷன்கார்டுகளின் செல்லுபடி காலத்தை மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டித்து உள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு தேவையான உள்தாள்கள் அச்சடிக்கப்பட்டு இன்னும் வந்து சேரவில்லை. வருகிற 2 அல்லது 3-ந்தேதி அந்த உள்தாள்கள் நீலகிரிக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கிறோம். அதன்பிறகு மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். பின்னர் அடுத்த வாரத்தில் இருந்து முதலில் ஆதார் எண் இணைக்கப்பட்ட ரேஷன்கார்டுதாரர்களுக்கு உள்தாள்கள் ஒட்டப்படும். அதன்பிறகு ஆதார் எண் இல்லாதவர்களின் ரேஷன்கார்டுகளின் உண்மை தன்மை ஆராயப்பட்டு உள்தாள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story