சின்னமனூர் அருகே ஊரை விட்டு வெளியேறிய கிராம மக்கள் வழக்கை திரும்பப்பெற வலியுறுத்தி போராட்டம்


சின்னமனூர் அருகே ஊரை விட்டு வெளியேறிய கிராம மக்கள் வழக்கை திரும்பப்பெற வலியுறுத்தி போராட்டம்
x
தினத்தந்தி 31 Dec 2016 5:00 AM IST (Updated: 31 Dec 2016 2:42 AM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் அருகே, ஊரை விட்டு ஒரு தரப்பை சேர்ந்த கிராம மக்கள் வெளியேறினர். ஊருக்குள் திரும்ப வரவேண்டுமானால், தங்கள் மீது உள்ள வழக்கை திரும்பப்பெற வே

சின்னமனூர் அருகே, ஊரை விட்டு ஒரு தரப்பை சேர்ந்த கிராம மக்கள் வெளியேறினர். ஊருக்குள் திரும்ப வரவேண்டுமானால், தங்கள் மீது உள்ள வழக்கை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊரை விட்டு வெளியேறிய மக்கள்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டி கிராமத்தில் கடந்த 22-ந் தேதி இறந்த ஒருவரின் இறுதி ஊர்வலம் நடந்தது. இது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் இருதரப்பினரும் சின்னமனூர் போலீசில் புகார் கொடுத்தனர். இதில் 27 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு தரப்பினர் வீடுகள் மீது மற்றொரு தரப்பினர் தாக்குதல் நடத்தினர்.

இதனை கண்டித்து நேற்று காலையில் ஒரு தரப்பை சேர்ந்த கிராம மக்கள் ஊரை விட்டு குடும்பத்துடன் வெளியேறினர். அவர்கள் அய்யம்பட்டி அருகே உள்ள சாலமலை பகுதியில் குடியேறினர். அங்கு அவர்கள் சமையல் செய்து சாப்பிட்டனர். மீண்டும் ஊருக்குள் திரும்ப வர மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

தகவலறிந்த தாசில்தார் குமார், போடி போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபாகரன், இன்ஸ்பெக்டர் சீமைராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் மோனிகா மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அவர்கள் தங்கள் மீது போலீஸ்நிலையத்தில் உள்ள வழக்கை திரும்பப் பெறவேண்டும்.

கிராமத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைத்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு ஊருக்குள் திரும்பினர்.

Next Story