மோட்டார் சைக்கிள் வாங்கித் தராததால் ஆத்திரம்: தாயை கத்தியால் குத்திக் கொன்றவருக்கு வலைவீச்சு
புதுவையில் மோட்டார் சைக்கிள் வாங்கித் தராத ஆத்திரத்தில் தாயை கத்தியால் குத்திக் கொலை செய்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மோட்டார் சைக்கிள் புதுவை கதிர்காமம் தட்சணா நகரை சேர்ந்தவர் தம்பியப்பன். இவரது மனைவி மேரி சிரஞ்சீவி (வயது 60). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. மூத்த
புதுவையில் மோட்டார் சைக்கிள் வாங்கித் தராத ஆத்திரத்தில் தாயை கத்தியால் குத்திக் கொலை செய்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள்
புதுவை கதிர்காமம் தட்சணா நகரை சேர்ந்தவர் தம்பியப்பன். இவரது மனைவி மேரி சிரஞ்சீவி (வயது 60). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. மூத்த மகன் வெரோன்(35). தொழிலாளி. இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்துள்ளார். இவர் மீது கோரிமேடு போலீஸ் நிலையத்தில் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனால் அவரை பெற்றோர் கண்டுகொள்ளவில்லை.
இந்தநிலையில் தம்பியப்பன் 2 நாட்களுக்கு முன் 2-வது மகனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்து உள்ளார். இதனை பார்த்த உடன் ஆத்திரம் அடைந்த வெரோன், தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி தாராமல் தம்பிக்கு எவ்வாறு வாங்கி கொடுக்கலாம் என்று கேட்டு பெற்றோருடன் தகராறு செய்துள்ளார். பின்னர் தனது பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.
கத்தியால் குத்தினார்
நேற்று முன்தினம் இரவு மீண்டும் அவர் வீட்டிற்கு வந்தார். நேற்று காலையில் எழுந்த அவர் தனக்கும் மோட்டார் சைக்கிள் வாங்கித் தர வேண்டும் என்று கேட்டு தனது பெற்றோரிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போது அவரது தாய் மேரி சிரஞ்சீவி, வெரோனிடம் நீ ஊர் சுற்றி வருவதால் உனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி தரமுடியாது என கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வெரோன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது தாயின் முகத்தில் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த மேரி சிரஞ்சீவி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும் தடுக்கப் போன தந்தை தம்பியப்பனையும் தாக்கி விட்டு வெரோன் தப்பி ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த தம்பியப்பன் கூச்சலிட்டார்.
பரிதாப சாவு
உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக் காக புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் மேரி சிரஞ்சீவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தம்பியப்பனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து வெரோனை வலைவீசி தேடிவருகின்றனர். வெரோனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மனைவி அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

Next Story