மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை சிக்கமகளூரு கோர்ட்டு தீர்ப்பு


மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை சிக்கமகளூரு கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 31 Dec 2016 3:43 AM IST (Updated: 31 Dec 2016 3:43 AM IST)
t-max-icont-min-icon

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சிக்கமகளூரு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. வரதட்சணை கொடுமை சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா எஸ்கல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 30). கூலி தொழிலாளி. இவருக்க

சிக்கமகளூரு

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சிக்கமகளூரு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

வரதட்சணை கொடுமை

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா எஸ்கல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 30). கூலி தொழிலாளி. இவருக்கும் சிக்கமகளூரு என்.எம்.டி.சி. பகுதியை சேர்ந்த துரை என்பவரின் மகள் சுதா (24) என்பவருக்கும் கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் 29–ந்தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின்போது துரை, ராஜேந்திரனுக்கு பணம்–நகைகள் வரதட்சணையாக கொடுத்துள்ளார். திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே ராஜேந்திரன், சுதாவிடம் கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தி உள்ளார்.

அதன்படி, சுதா தனது தந்தையிடம் இருந்து ரூ.20 ஆயிரம், ரூ.40 ஆயிரம் என 2 முறை வரதட்சணை வாங்கி கணவரிடம் கொடுத்துள்ளார். அதன்பின்பும் ராஜேந்திரன், சுதாவிடம் மீண்டும் வரதட்சணை வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தி வந்தார்.

தற்கொலை

ஆனால், மீண்டும் வரதட்சணை வாங்கிவர சுதா மறுத்ததாக தெரிகிறது. இதனால் ராஜேந்திரன், சுதாவை தினமும் அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த சுதா, தனது கணவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் கடந்த 2013–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12–ந்தேதி நடந்தது.

இதுகுறித்து துரை கொடுத்த புகாரின்பேரில், வரதட்சணை வாங்கிவர மறுத்த சுதாவை தற்கொலைக்கு தூண்டியதாக ராஜேந்திரனை மூடிகெரே போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் மீது சிக்கமகளூரு ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முதல் வகுப்பு கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

7 ஆண்டு சிறை

இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக சிக்கமகளூரு கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் ராஜேந்திரன், சுதாவை தற்கொலைக்கு தூண்டியது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி கெம்பேகவுடா நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். இதில், குற்றம்சாட்டப்பட்ட ராஜேந்திரனுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story