கடல் கடந்த பாசப்போராட்டம் 30 ஆண்டுகளுக்கு பின் வளர்ப்பு பாட்டியை தேடி கண்டுபிடித்த பக்ரைன் நாட்டு மந்திரி


கடல் கடந்த பாசப்போராட்டம் 30 ஆண்டுகளுக்கு பின் வளர்ப்பு பாட்டியை தேடி கண்டுபிடித்த பக்ரைன் நாட்டு மந்திரி
x
தினத்தந்தி 31 Dec 2016 3:46 AM IST (Updated: 31 Dec 2016 3:46 AM IST)
t-max-icont-min-icon

30 ஆண்டுகளுக்கு பின் வளர்ப்பு பாட்டியை மங்களூருவில் கண்டுபிடித்த பக்ரைன் நாட்டு மந்திரி, அவருடன் பாசப்போராட்டம் நடத்தினார். கடின உழைப்பு உலகத்தில் பிறந்த மனிதர்கள் முதல் உயிரினங்கள் வரை அனைவரிடமும் பாசம் என்பது இருக்கும். இந்த நிலையில் தன்னை வளர்த்து வ

மங்களூரு

30 ஆண்டுகளுக்கு பின் வளர்ப்பு பாட்டியை மங்களூருவில் கண்டுபிடித்த பக்ரைன் நாட்டு மந்திரி, அவருடன் பாசப்போராட்டம் நடத்தினார்.

கடின உழைப்பு

உலகத்தில் பிறந்த மனிதர்கள் முதல் உயிரினங்கள் வரை அனைவரிடமும் பாசம் என்பது இருக்கும். இந்த நிலையில் தன்னை வளர்த்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த பாட்டியை பார்ப்பதற்காக பக்ரைன் நாட்டு மந்திரி ஒருவர் கர்நாடக மாநிலம் மங்களூருவுக்கு வந்துள்ளார். அதுபற்றிய விவரம் பின்வருமாறு:–

பக்ரைன் நாட்டின் வெளியுறவு துறை மந்திரியாக இருப்பவர் காலித் பின் அகமது (வயது 60). இவரை சிறுவயது முதல் 30 வயது வரை கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த கார்மீனா மத்தியாஸ் என்பவர் வளர்த்து வந்தார். பின்னர் காலித் பின் அகமதுவை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தார். பக்ரைன் நாட்டுக்கு சென்ற காலித் பின் அகமது, அங்கு சென்று தனது கடினமாக உழைத்தார். தனது கடின உழைப்பால் உயர்ந்த காலித், அந்த நாட்டின் குடியுரிமை பெற்றார். அதன்பின்னர் அவர் படிப்படியாக அந்த நாட்டின் அரசியலில் நுழைந்தார்.

மந்திரியாக தேர்வு

பின்னர் அவர் அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் பக்ரைன் நாட்டின் வெளியுறவு துறை மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பக்ரைன் நாட்டின் மந்திரியாக இருந்தாலும், தன்னை வளர்த்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த பாட்டியை பற்றி அடிக்கடி விசாரித்து வந்தார். ஆனால் தற்போது அவர், காலித்துடன் வசித்த இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு சென்றுவிட்டதாக தெரிவித்தனர்.

இதனால் ஏமாற்றமடைந்த காலித், தனது வளர்ப்பு பாட்டியை தேடுவதை மட்டும் நிறுத்தவில்லை. தனது வளர்ப்பு பாட்டி கிடைத்தால் தகவல் தெரிவிக்குமாறு அவர் அங்குள்ளவர்களிடம் கூறியுள்ளார். இந்த நிலையில், பக்ரைன் மந்திரி காலித்தின் வளர்ப்பு பாட்டி மங்களூரு டவுனில் வசித்து வருவது தெரியவந்தது. இதுகுறித்து அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அறிந்த காலித், நேற்று முன்தினம் விமானம் மூலம் மங்களூருவுக்கு வந்தார். பின்னர் அவர் தனது வளர்ப்பு பாட்டி இருக்கும் இடத்துக்கு சென்றார்.

பாசப்போராட்டம்

அங்கு தனது வளர்ப்பு பாட்டி கார்மீனா மத்தியாசை சந்தித்தார். 30 ஆண்டுகளுக்கு பிறகு வளர்ப்பு பாட்டியை தேடி கண்டுப்பிடித்த பக்ரைன் நாட்டு மந்திரி அவரை காலித் கட்டி தழுவி பாசமழையை பொழிந்தார். கார்மீனா மத்தியாசுக்கு தற்போது 91 வயது ஆகிறது. பின்னர் காலித், தான் பக்ரைன் நாட்டில் உயர்ந்த நிலையில் இருப்பதாக தனது வளர்ப்பு பாட்டியிடம் தெரிவித்தார்.

இதனால் உணர்ச்சி வசப்பட்ட கார்மீனா மத்தியாஸ், காலித்தை கட்டித்தழுவினார். இவர்களின் பாசப்போராட்டம் அங்கிருந்தவர்களின் கண்களை குளமாக்கின. இதையடுத்து காலித், தனது வளர்ப்பு பாட்டியின் கையால் சாப்பிட்டார். நேற்று முன்தினம் நாள் முழுவதும் அவர் தனது வளர்ப்பு பாட்டியுடன் கழித்துவிட்டு விமானம் மூலம் பக்ரைன் புறப்பட்டு சென்றார். பக்ரைன் நாட்டு மந்திரி ஒருவர் தன்னை வளர்த்த பாட்டியை பார்க்க கடல் கடந்து வந்து பாசப்போராட்டம் நடத்தியது அந்தப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.



Next Story