திருச்சி விமானநிலையத்தில் “மர்ம பை” கிடந்ததால் பரபரப்பு
செம்பட்டு, திருச்சி விமானநிலையத்தில் “மர்ம பை” கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலையம் திருச்சி விமானநிலையத்தில் இருந்து சென்னைக்கும், துபாய், இலங்கை, மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையி
செம்பட்டு,
திருச்சி விமானநிலையத்தில் “மர்ம பை” கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விமான நிலையம்
திருச்சி விமானநிலையத்தில் இருந்து சென்னைக்கும், துபாய், இலங்கை, மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் புத்தாண்டு, பொங்கல் மற்றும் குடியரசு தினவிழா கொண்டாட்டத்தை தீவிரவாதிகள் சீர்குலைக்க திட்டமிட்டு உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதையடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து விமானநிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
அதன்படி திருச்சி விமானநிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணியில் விமானநிலைய போலீசார், மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பாதுகாப்பு நலன்கருதி திருச்சி விமானநிலையத்தின் பார்வையாளர் மாடம் நேற்று முன்தினம் முதல் ஜனவரி மாதம் 30-ந்தேதி வரை மூடப்படுகிறது.
“மர்ம பை”
இந்நிலையில் நேற்று மாலை 4.30 மணியளவில் திருச்சி விமானநிலையத்தில் விமானங்கள் ஏறுவதற்கு பயணிகள் உள்ளே செல்லும் புறப்பாடு பகுதிக்கு முன்பாக ஒரு “மர்ம பை” யாரும் கேட்பாரற்று அனாதையாக கிடந்தது. இதனை கண்டு அச்சமடைந்த பயணிகள் ஏற்கனவே விமானநிலையத்திற்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால், அந்த பையில் வெடி குண்டு இருக்குமோ? என்ற சந்தேகத்தில் அதன் அருகே செல்லவில்லை. இது குறித்து தகவலறிந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பையை சோதனை செய்தனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனைக்கு ஈடுபடுத்தப்பட்டது.
ஆனால் அந்த பையில் சேலைகள், தண்ணீர் பாட்டில்கள், அப்பள கட்டுகள், பிஸ்கட் பாக்கெட்டுகள் உள்ளிட்டவைகள் இருந்தது தெரியவந்தது. அதில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்பதை தொடர்ந்து அவற்றை போலீசார் கைப்பற்றி சென்றனர். இது தொடர்பாக விமானநிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து விமானநிலையத்தின் உள் பகுதிகளில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு கேமரா மூலமாக தீவிரமாக கண்காணித்து வருவதுடன் பயணிகளின் உடைமைகளை மோப்ப நாய் மூலம் சோதனை செய்து வருகின்றனர். விமான நிலையத்துக்கு வரும் பயணிகளையும், வாகனங்களையும் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பிறகு உள்ளே வருவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். திருச்சி விமானநிலையத்தில் “மர்ம பை” கிடந்ததால் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story