தெருமுனை பிரசார கூட்டம்
திருமானூர், அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கீழப்பழுவூரில் காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் மற்றும் இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழா, கட்சியின் கொடியேற்று விழா மற்றும் கருப்பு பண ஒழிப்பு என்ற பெயரில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் மக்கள் படும் துன்பங்களை விளக்கி தெருமுனை பிரசார கூட்டம் நடைபெ
திருமானூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கீழப்பழுவூரில் காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் மற்றும் இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழா, கட்சியின் கொடியேற்று விழா மற்றும் கருப்பு பண ஒழிப்பு என்ற பெயரில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் மக்கள் படும் துன்பங்களை விளக்கி தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கட்சியின் மேலிட பார்வையாளர் சந்திரசேகர், வட்டார தலைவர் சீமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் (மேற்கு) பாண்டியராஜன் வரவேற்றார். பேச்சாளர் மோகன்தாஸ் கட்சியின் செயல்பாடுகள், வளர்ச்சி மற்றும் கருப்பு பணம் ஒழிப்பு என்ற பெயரில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் படும் இன்னல்கள் குறித்து பேசினார்.
இதைத்தொடர்ந்து திருமானூரில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து சாத்தமங்கலம், கீழகாவட்டாங்குறிச்சி, கரைவெட்டி பரதூர், வெங்கனூர், கோவில் எசனை, இலந்தைகூடம், செம்பியகுடி, குலமாணிக்கம், திருமழபாடி, பாளையபாடி, மஞ்சமேடு, கள்ளூர், கீழகுளத்தூர், விழுப்பணங்குறிச்சி உள்ளிட்ட பல கிராமங்களில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. இதில் மாவட்ட துணை தலைவர் சந்திரசேகர், கட்சியின் செய்தி தொடர்பாளர் சிவக்குமார், மாவட்ட மகளிரணி தலைவி மாரியம்மாள், மாவட்ட பொதுச்செயலாளர் தேவர், சேவாதள மாவட்ட தலைவர் சிவா, மாவட்ட செயலாளர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story