அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்
தாமரைக்குளம், ஜெயங்கொண்டம் வளவனேரியில் உள்ள கருவேல மரங்களை அகற்றி தூர்வார வேண்டும் என்று அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. குறைதீர்க்கும் நாள் கூட்டம் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்
தாமரைக்குளம்,
ஜெயங்கொண்டம் வளவனேரியில் உள்ள கருவேல மரங்களை அகற்றி தூர்வார வேண்டும் என்று அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன் பேசுகையில், மழை பொய்த்து விட்டதால் அரியலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம், பருத்தி, நெல், கரும்பு, கடலை, உளுந்து, மிளகாய், கம்பு உள்ளிட்ட பயிர்கள் காய்ந்துள்ளது. எனவே அரியலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்துறை ஒன்றியம் பரணம் உயர்நிலைப்பள்ளியில் சில வகுப்பறைகள் இடிந்து விழுந்து 5 ஆண்டுகளாகியும் இதுவரை புதிய கட்டிடம் கட்டப்படாமல் உள்ளது. எனவே அந்த பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஜெயங்கொண்டம் வளவனேரியில் உள்ள கருவேல மரங்களை அகற்றி ஏரியை தூர்வார வேண்டும். ஜெயங்கொண்டம் பொன்னேரியில் முறைகேடாக லாரிகளில் மண் எடுக்கப்பட்டு ரூ.4 ஆயிரம் வரை விற்று வருகிறார்கள். இதை தடுத்து, விவசாயிகள் மண் எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
வாய்க்கால்களை தூர்வார வேண்டும்
அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் செங்கமுத்து பேசுகையில், வறட்சியின் காரணமாக மாவட்டத்திலுள்ள ஆழ்குழாய் கிணறுகளில் நீர் வற்றி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆழ்குழாய் கிணறுகளை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.அம்பேத்கர் விவசாய இயக்க மாநில தலைவர் அம்பேத்கர் வழியன் பேசுகையில், சுக்கிரன் ஏரியின் கிளை வாய்க்கால்களை தூர்வார வேண்டும். கமரசவல்லி முதல் நானாங்கூர் வரை உள்ள குண்டும், குழியுமான சாலையை சீர் செய்ய வேண்டும்.
அரியலூர் பஸ் நிலையத்தில் ஏ.டி.எம். மையம் அமைக்க வேண்டும். அரியலூர் நகரில் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதைத்தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு கலெக்டர் சரவணவேல்ராஜ் விளக்கம் அளித்து பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரெங்கராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் யோகேஸ்வரி, கூட்டுறவு இணை இயக்குனர் தயாளன், வேளாண் இணை இயக்குனர் சதானந்தம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story