ஆவுடையார்கோவிலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


ஆவுடையார்கோவிலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Dec 2016 5:00 AM IST (Updated: 31 Dec 2016 4:42 AM IST)
t-max-icont-min-icon

ஆவுடையார்கோவில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவுடையார்கோவிலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் ஆவுடையார்கோவில் கடைவீதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கருப்பூர் இளங்கோவன் தலைமை தாங்கி

ஆவுடையார்கோவில்,

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவுடையார்கோவிலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

ஆவுடையார்கோவில் கடைவீதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கருப்பூர் இளங்கோவன் தலைமை தாங்கினார். இதில் கலந்தர், கோவிந்தராசு, கனகராஜன், சுப்பிரமணியன் மற்றும் ஆவுடையார்கோவில் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் முல்லை வேந்தன் நன்றி கூறினார்.

நிவாரணம் வழங்க வேண்டும்

ஆவுடையார்கோவில் தாலுகாவில் ஆவுடையார் கோவில், பொன்பேத்தி, மீமிசல், ஏம்பல் போன்ற பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் விவசாயிகள் சுமார் 60 ஆயிரம் ஏக்கரில் நெல் விவசாயம் செய்திருந்தனர். இந்நிலையில் இப்பகுதியில் மழை இல்லாமல் அனைத்து நெல் விவசாயமும் பயனற்று போய்விட்டன அதனால் ஆவுடையார்கோவில் தாலுகாவை வறட்சி பாதித்த தாலுகாவாக அறிவித்து நிவாரணத்தொகையாக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story