முகத்தில் திராவகத்தை வீசிவிடுவதாக கல்லூரி மாணவியை மிரட்டிய வாலிபர் கைது


முகத்தில் திராவகத்தை வீசிவிடுவதாக கல்லூரி மாணவியை மிரட்டிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 31 Dec 2016 4:49 AM IST (Updated: 31 Dec 2016 4:49 AM IST)
t-max-icont-min-icon

காந்திவிலியில், முகத்தில் திராவகத்தை வீசிவிடுவதாக கல்லூரி மாணவியை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார். கல்லூரி மாணவி மும்பை காந்திவிலி சார்க்கோப்பை சேர்ந்த 17 வயது மாணவி சாந்தாகுருசில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இந்த மாணவியை மனோஜ் ஜல்காவ்கர்(

மும்பை

காந்திவிலியில், முகத்தில் திராவகத்தை வீசிவிடுவதாக கல்லூரி மாணவியை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கல்லூரி மாணவி

மும்பை காந்திவிலி சார்க்கோப்பை சேர்ந்த 17 வயது மாணவி சாந்தாகுருசில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இந்த மாணவியை மனோஜ் ஜல்காவ்கர்(24) என்ற வாலிபர் பின் தொடர்ந்து சென்று சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு வந்து இருக்கிறார்.

மனோஜ் ஜல்காவ்கர் காந்திவிலியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டிடத்தில் கட்டுமான தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

சம்பவத்தன்று மாணவி தனது வீட்டில் உள்ள குப்பையை வெளியில் கொட்டுவதற்காக வந்தபோது, அங்கு காத்து இருந்த மனோஜ் ஜல்காவ்கர் மாணவியின் கையைப்பிடித்து இழுத்து அவரது செல்போன் எண்ணை கேட்டு இருக்கிறார்.

கைது

இதற்கு மறுப்பு தெரிவித்து மாணவி அவரை கடுமையாக எச்சரித்தார். இதனால் கோபம் அடைந்த மனோஜ் ஜல்காவ்கர் மாணவியின் முகத்தில் திராவகத்தை வீசி விடுவதாக மிரட்டி இருக்கிறார். இதனால் பயந்துபோன மாணவி வீட்டிற்கு வந்து நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் சார்க்கோப் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்தநிலையில், குற்றப்பிரிவு போலீசார் காந்திவிலி மேற்கு பகுதியில் வைத்து மனோஜ் ஜல்காவ்கரை கைது செய்து சார்க்கோப் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story