மும்பை–நாக்பூர் விரைவுச்சாலையில் நவீன தொழில்நுட்ப முறையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பேட்டி
சுங்க கட்டண வசூலில் டிஜிட்டல்மயமாக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, 710 கிலோ மீட்டர் தூர மும்பை– நாக்பூர் சூப்பர் விரைவுச்சாலையில், நவீன தொழில்நுட்ப முறையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. அதன்படி, இந்த விரைவுச்சாலையில் இனி சுங்க சாவடிகளுக்கு வேலையில்லை.
மும்பை

அதற்கு பதிலாக ஆர்.எப்.ஐ.டி எனப்படும் ரேடியோ அதிர்வெண் அடையாள மையம் ஏற்படுத்தப்பட்டு, ரொக்கமற்ற முறையில் அதாவது நவீன தொழில்நுட்ப முறையில் பயணிகளிடம் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் ஆசிஷ் குமார் சிங் மும்பையில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
இந்த முறை ஏற்கனவே பல மாநில நெடுஞ்சாலைகளில் நடைமுறையில் இருப்பதாகவும், வெகு சிலருக்கே இதுபற்றி தெரியும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். மும்பை– நாக்பூர் விரைவுச்சாலை திட்டம் இன்னும் 3 ஆண்டுகளில் நிறைவடைந்து, பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.