யவத்மால் மாவட்டத்தில் விவசாயிகள் தற்கொலை 40 சதவீதம் குறைந்துவிட்டது தேவேந்திர பட்னாவிஸ் பேச்சு


யவத்மால் மாவட்டத்தில் விவசாயிகள் தற்கொலை 40 சதவீதம் குறைந்துவிட்டது தேவேந்திர பட்னாவிஸ் பேச்சு
x
தினத்தந்தி 31 Dec 2016 4:55 AM IST (Updated: 31 Dec 2016 4:55 AM IST)
t-max-icont-min-icon

யவத்மால் மாவட்டம் கலாம்ப் பகுதியில் புதிய நிர்வாக கட்டிடத்தை முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சமீபத்தில் திறந்து வைத்தார். அதன்பின்னர், சக்ரவதி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவி

யவத்மால்

யவத்மால் மாவட்டம் கலாம்ப் பகுதியில் புதிய நிர்வாக கட்டிடத்தை முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சமீபத்தில் திறந்து வைத்தார். அதன்பின்னர், சக்ரவதி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசும்போது, ‘‘விதர்பா மண்டலத்தில் விவசாயிகளின் தற்கொலை சம்பவத்தால் யவத்மால் மாவட்டம் மோசமான விளைவுகளை சந்தித்தது. இந்த நிலையில், விவசாயிகளின் தற்கொலை சம்பவத்தை குறைப்பதில் அரசு வெற்றி பெற்றுவிட்டது. யவத்மால் மாவட்டத்தில் விவசாயிகளின் தற்கொலை 40 சதவீதம் குறைந்துவிட்டது’’ என்றார்.

மேலும், ஒரு விவசாயிகள் கூட தற்கொலை செய்து கொண்டு தங்களது இன்னுயிரை இழக்கவில்லை என்ற நிலைப்பாட்டை அடையும் வரையில் எங்களது முயற்சி ஓயாது என்றும் அப்போது அவர் சூளுரைத்தார்.


Next Story