கரும்பு கொள்முதல் விலையாக ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்
தஞ்சாவூர், கரும்பு கொள்முதல் விலையாக ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். விவசாயிகள் கருத்து தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தெ
தஞ்சாவூர்,
கரும்பு கொள்முதல் விலையாக ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
விவசாயிகள் கருத்து
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
நரசிங்கம்பேட்டை ரவிச்சந்திரன்: நெற்பயிர்கள் கருகிவிட்டதால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழகஅரசு கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
சுவாமிமலை விமல்நாதன்: தனியார் சர்க்கரை ஆலைகள் சென்ற ஆண்டு அரவை பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்ட கரும்பிற்குரிய நிலுவைத் தொகையை முழுமையாக இதுவரை வழங்கவில்லை. கடலூர் மாவட்டத்தில் நிலுவைத் தொகை முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும். அந்த பட்டியலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள் தங்களது கடமையை உரிய காலத்திற்குள் செய்யாதது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்: ஆழ்குழாய் அமைத்து மின் இணைப்பு கேட்டு காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனே புதிய மின் இணைப்பு வழங்க வேண்டும். கரும்பு விலை டன் ஒன்றுக்கு ரூ.2,850 என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. இதை உடனடியாக மறுபரிசீலனை செய்து கரும்பு கொள்முதல் விலையாக டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
மணல் கொள்ளை
அம்மையகரம் ரவிச்சந்தர்: நெற்பயிர் கருகியதால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.
தஞ்சை பனசை அரங்கன்: ஆறுகளில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். லாரிகள், மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதிக்காமல் கட்டிட பணிக்கு மணல் தேவைப்பட்டால் அவற்றை சிமெண்டு விற்பனை செய்வதைபோல் மணல் மூட்டையாக விற்பனை செய்ய பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குருங்குளம் ராமநாதன்: தற்போது ஆறுகள், வாய்க்கால் களில் தண்ணீர் செல்லவில்லை. இந்த நேரத்தில் ஆறுகள், வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு கொள்முதல் விலையாக ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும்.
மதுக்கூர் சந்திரன்: கடலை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு எக்டேருக்கு அரசு மானியமாக ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும். உளுந்து சாகுபடி செய்த விவசாயிகளுக்கு தேவையான உரம் மானிய விலையில் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விசித்திரராசபுரம் சமுத்திரம்: எங்கள் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கருகிய நெற்பயிர்களுக்கு உரிய பயிர் காப்பீட்டுத்தொகை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீமைக்கருவேல மரங்கள்
கீழக்கோட்டை தங்கவேல்: பொங்கல் பண்டிகைக்கு முன்பாக டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து விவசாயிகளுக்கு, விவசாய தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
பள்ளத்தூர் கூத்தலிங்கம்: பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்காய் ஒன்றுக்கு ஆரம்ப விலையாக ரூ.20 நிர்ணயம் செய்ய அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும்.

Next Story