வீட்டு வசதி வாரியத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


வீட்டு வசதி வாரியத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Dec 2016 5:33 AM IST (Updated: 31 Dec 2016 5:32 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நிலம் கையகப்படுத்தும் பணி மதுரை தோப்பூர், உச்சப்பட்டி ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு வீட்டு வசதி வார

திருமங்கலம்,

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நிலம் கையகப்படுத்தும் பணி

மதுரை தோப்பூர், உச்சப்பட்டி ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் துணைக்கோள் நகரம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதற்கு அந்தப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் மின்கோபுரத்தில் ஏறியும், சிலர் தீக்குளிக்க முயன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

இதனால் நிலம் கையகப்படுத்தும் பணியை அதிகாரிகள் தற்காலிகமாக கைவிட்டனர். விவசாய நிலங்களை கைப்பற்றும் அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்தும், நிலம் கையகப்படுத்துவதை முழுமையாக கைவிட வேண்டும் என்றும் திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு திருமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் பழக்கடை சுப்பிரமணி, தமிழ்செல்வம், சேகர், சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ஈஸ்டர்ரபீ வரவேற்றார்.

மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் இன்குலாப், பாண்டியம்மாள், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் சுப்புக்காளை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் தேவராஜ், உலகப்பா, சந்தானம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உச்சப்பட்டி கிராம பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story