நெல்லையில் ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


நெல்லையில் ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 1 Jan 2017 1:30 AM IST (Updated: 31 Dec 2016 5:17 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை,

நெல்லையில் ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆசிரியை

நெல்லையை சேர்ந்தவர் ஆனந்தவேல். இவருடைய மனைவி சங்கரேசுவரி (வயது 32). இவர் கடலூர் மாவட்டம் தொழுதூரில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய தந்தை செல்வராஜ். நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி பெரியார் நகரில் வசித்து வருகிறார்.

சங்கரேசுவரி அரையாண்டு தேர்வு விடுமுறையையொட்டி சுத்தமல்லியில் உள்ள தந்தை வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று சங்கரேசுவரி, அவருடைய தந்தை செல்வராஜ் உடன் நேற்று மதியம் நெல்லை சந்திப்புக்கு வந்தார். அங்குள்ள ஒரு வங்கியில் ரூ.15 ஆயிரத்தை எடுத்தார். பின்னர் அந்த பணத்தை ஒரு பையில் வைத்துக் கொண்டு சந்திப்பு பஸ் நிலையத்துக்கு சென்றனர்.

பணம் திருட்டு

அங்கிருந்து வண்ணார்பேட்டைக்கு பஸ்சில் புறப்பட்டு சென்றார்கள். வண்ணார்பேட்டையில் பஸ்சை விட்டு கீழே இறங்கியதும், பையில் இருந்த ரூ.15 ஆயிரத்தை காணவில்லை. ஓடும் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் சங்கரேசுவரி பையில் இருந்த ரூ.15 ஆயிரத்தை நைசாக திருடிச் சென்று விட்டார்கள்.

இதுகுறித்து சங்கரேசுவரி பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியையிடம் பணம் திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story