பேரணாம்பட்டு அருகே பாறாங்கல்லை தூக்கிப்போட்டு வாலிபர் கொடூர கொலை யார் அவர்? என போலீசார் விசாரணை


பேரணாம்பட்டு அருகே பாறாங்கல்லை தூக்கிப்போட்டு வாலிபர் கொடூர கொலை யார் அவர்? என போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 1 Jan 2017 4:15 AM IST (Updated: 31 Dec 2016 6:26 PM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டு அருகே பாறாங்கல்லை தூக்கிப்போட்டு வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொடூர கொலை பேரணாம்பட்டு அருகே கீழ்பட்டியில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் மகேந்திரன் என்பவருக்கு சொந்

ஆம்பூர்,

பேரணாம்பட்டு அருகே பாறாங்கல்லை தூக்கிப்போட்டு வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொடூர கொலை

பேரணாம்பட்டு அருகே கீழ்பட்டியில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் மகேந்திரன் என்பவருக்கு சொந்தமான விவசாயம் நிலம் உள்ளது. அங்கு நேற்று காலை சுமார் 35 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் தலை மற்றும் முகம், மார்பு ஆகிய இடங்களில் பாறாங்கல்லால் கொடூரமாக தாக்கப்பட்டும் ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டும் கிடந்தார். அவரது மார்பின் மீது பாறாங்கல் வைக்கப்பட்டு இருந்தது.

அந்த வழியே சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து உடனடியாக மேல்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் குடியாத்தம் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கரன், பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் மேல்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மோப்பம் பிடித்தது

கொலை செய்யப்பட்டு கிடந்தவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவர் இடது கையில் வளையமும், தலையில் தொப்பியும் அணிந்திருந்தார். ரோஸ் நிறத்தில் சட்டையும், கருப்பு நிற பேண்ட்டும் அணிந்திருந்தார்.

கொலையாளிகள் குறித்து துப்பு துலக்க வேலூரில் இருந்து மோப்பநாய் சிம்பா வரவழைக்கப்பட்டது. பிணத்தின் மீது மோப்பம்பிடித்த நாய் சிறிது தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது. யாரை கவ்வி பிடிக்கவில்லை. விரல் ரேகை நிபுணர்களும் அங்கு வந்து பாறாங்கல் மீது பதிவாகியிருந்த ரேகைகளை பதிவு செய்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மேல்பட்டி போலீசார் கொலை செய்யப்பட்டவர் யார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story