தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை
தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் எனநம்புவதாக பசும்பொன்னில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மத்திய மந்திரி கமுதி அருகே பசும்பொன் கிராமத்திற்கு வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அங்குள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தி
கமுதி,
தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் எனநம்புவதாக பசும்பொன்னில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மத்திய மந்திரிகமுதி அருகே பசும்பொன் கிராமத்திற்கு வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அங்குள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் தியான மண்டபத்துக்கு சென்று சுமார் 1 மணி நேரம் தியானம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க செல்லும்போது எல்லை தாண்டுகிறார்கள் என இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், படகுகள் பறிக்கப்படுவதும் வழக்கமாக உள்ளது.
இதன் காரணமாக மத்திய அரசு மீனவர்களின் நலன் கருதி அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் மூக்கையூர், வாலிநோக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள மீனவ கிராமங்கள் பயன்பெறும் வகையில் மூக்கையூரில் ரூ.120 கோடி மதிப்பில் துறைமுகம் அமைக்க 2 மாதத்திற்கு முன்பு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கருத்து தெரிவித்திருந்தேன். இந்த திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
நம்பிக்கைமேலும் நதிநீர் இணைப்பு திட்டம் வாஜ்பாய் தலைமையில் மத்தியில் ஆட்சி நடைபெற்றபோது தொடங்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு இந்த திட்டத்தை தடுத்தது. காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி இந்ததிட்டம் சாத்தியமாகாது என்றும், பொய்யான திட்டம் என தடுத்தார். 30 ஆண்டுகளாக திட்டமிடப்பட்ட இந்த திட்டம் நீர்வழிச்சாலைகளை இணைக்கும் வகையில் 111 நீர்வழிச்சாலைகளை இணைத்து போதிய அளவு குடிநீர் சேமிப்பு, நிலத்தடி நீர் சேமிப்பு மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடத்தப்படும் என நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அவருடன் பா.ஜ.க. மாநில துணை தலைவர் மதுரை சுரேந்திரன், ராமநாதபுரம் மாவட்ட துணை தலைவர் பூமிநாதன் உள்பட பலர் வந்திருந்தனர்.