சேலத்தில் மாநில அளவிலான குளிர்கால கலைப்பயிற்சி முகாம் நிறைவு கலெக்டர் சம்பத் பங்கேற்பு
சேலத்தில் மாநில அளவிலான குளிர்கால கலைப்பயிற்சி முகாமின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் சம்பத் பங்கேற்றார். கலைப்பயிற்சி நிறைவு விழா சேலம் மாவட்ட கலை பண்பாட்டு துறை சார்பில் மாநில அளவிலான குளிர்கால கலைப்பயிற்சி முகாம் நிறைவு விழா சேலம் அர
சேலம்,
சேலத்தில் மாநில அளவிலான குளிர்கால கலைப்பயிற்சி முகாமின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் சம்பத் பங்கேற்றார்.
கலைப்பயிற்சி நிறைவு விழாசேலம் மாவட்ட கலை பண்பாட்டு துறை சார்பில் மாநில அளவிலான குளிர்கால கலைப்பயிற்சி முகாம் நிறைவு விழா சேலம் அருகே தளவாய்பட்டி அரசு இசைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் சம்பத் தலைமை தாங்கினார். கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர் ஹேமநாதன் முன்னிலை வகித்தார். இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரராமன் வரவேற்றார். விழாவையொட்டி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் மாணவர்களின் ஓவிய கண்காட்சி நடந்தது. இதை கலெக்டர் சம்பத் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து மாணவர்கள், பயிற்றுனர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கலெக்டர் சம்பத் பேசியதாவது:–
கலை பண்பாட்டுத்துறை சார்பில் பள்ளி செல்லும் சிறார்கள் பல்வேறு தொன்மையான கலைகளை பகுதி நேரமாக படிக்கும் வகையில் மாவட்டத்தில் ஜவகர் சிறுவர் மன்றம் என்ற கலை பயிற்சி மையம் நடத்தப்படுகிறது. மத்திய அரசு சிறார்களுக்கு வழங்கும் உயரிய விருதான பாலஸ்ரீ விருது தேர்வும் இம்மன்றங்கள் மூலம் வழங்கப்படுகிறது. அதன்படி கடந்த ஆண்டு பாலஸ்ரீ விருது தேர்வில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி தேவிஸ்ரீ உள்பட சேலம் மண்டல அளவில் 6 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
100 சிறார்கள்காலண்டு, அரையாண்டு, கோடை விடுமுறையொட்டி தமிழக அளவிலான கலைப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100 சிறார்கள் கலந்து கொண்டனர். அவர்கள் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கைவினை, நாட்டுப்புற நடனம் ஆகியவற்றில் பயிற்சி பெற்றனர்.
இசை, நடனம் மற்றும் ஓவியக்கலைகளின் சிறப்புணர்ந்து தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து அரசு வளர்த்து வருகிறது. அதிலும் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் இசை மற்றும் கவின் கலைக்கென தனியே ஒரு பல்கலைக்கழகம் தோற்றுவித்துள்ளது. தமிழகத்தின் பழம் பெருமை வாய்ந்த கலைகள் பல நாட்டு மக்களையும் நமது கலைகளை கற்றுக் கொள்ள தூண்டுகிறது. நம் மாநிலத்தின் தொன்மை வாய்ந்த நாட்டுபுற கலைகளின் சிறப்புகளை இளம் தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் சம்பத் கூறினார்.
பாராட்டுமுன்னதாக பரதநாட்டியம், குரலிசை, ஓவியம், கைவினை, நாட்டுப்புறக்கலை மற்றும் சிலம்பக்கலை ஆகிய கலை பயிற்சி அளித்த பயிற்சியாளர்களுக்கும், பயிற்சி பெற்ற மாணவ, மாணவியர்களை கலெக்டர் பாராட்டி. சான்றிதழ்களை வழங்கினார்.