என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் சி.ஐ.டி.யு. தொழிலாளர் ஊழியர் சங்க ஆண்டு பேரவை கூட்டத்தில் தீர்மானம்


என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் சி.ஐ.டி.யு. தொழிலாளர் ஊழியர் சங்க ஆண்டு பேரவை கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 31 Dec 2016 10:00 PM GMT (Updated: 2016-12-31T19:07:12+05:30)

என்.எல்.சி. நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று சி.ஐ.டி.யு. தொழிலாளர் ஊழியர் சங்க ஆண்டு பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆண்டு பேரவை கூட்டம் சி.ஐ.டி.யு. என்.எல்.சி. தொழிலாளர் ஊழியர் சங்கத்தின் முதல் சுரங்க

நெய்வேலி,

என்.எல்.சி. நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று சி.ஐ.டி.யு. தொழிலாளர் ஊழியர் சங்க ஆண்டு பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆண்டு பேரவை கூட்டம்

சி.ஐ.டி.யு. என்.எல்.சி. தொழிலாளர் ஊழியர் சங்கத்தின் முதல் சுரங்க விரிவாக்க பகுதி ஆண்டு பேரவை கூட்டம் நெய்வேலியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுதி செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். நிர்வாகக் குழு திருநாவுக்கரசு, கலியபெருமாள், அசோக்ராஜ், வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ராஜாராவ் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் குப்புசாமி, தொழிற்சங்க பொதுச் செயலாளர் ஜெயராமன், மாவட்ட துணை செயலாளர் திருஅரசு, இணை செயலாளர் பிரேம்குமார், தொழிற்சங்க பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

சம வேலைக்கு சம ஊதியம்

கூட்டத்தில், என்.எல்.சி. நிறுவனத்தில் பதவி உயர்வில் உள்ள தடைகளை நீக்க வேண்டும். மருத்துவ தகுதி பெறும் முறையில் உள்ள கெடுபிடிகளை தளர்த்த வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், என்.எல்.சி. நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல் சுரங்க விரிவாக்க வாயில் முன்பு வருகிற 5–ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதை தொடர்ந்து தொழிற்சங்க தலைவர் வேல்முருகன் நிறைவு உரையாற்றினார். முடிவில் நிர்வாகக்குழு எழினி நன்றி கூறினார்.


Next Story