சென்னையில் இருந்து திருவனந்தபுரம் வரை ஆட்டோக்களில் வெளிநாட்டினர் சுற்றுப்பயணம் தஞ்சை பெரியகோவிலை சுற்றிப்பார்த்து வியந்தனர்
சென்னையில் இருந்து திருவனந்தபுரம் வரை ஆட்டோக்களில் வெளிநாட்டினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் தஞ்சை வந்தனர். தஞ்சையில் பெரியகோவிலை சுற்றிப்பார்த்து வியந்தனர். வெளிநாட்டினர் கென்யா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல்வேறு
தஞ்சாவூர்,
சென்னையில் இருந்து திருவனந்தபுரம் வரை ஆட்டோக்களில் வெளிநாட்டினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் தஞ்சை வந்தனர். தஞ்சையில் பெரியகோவிலை சுற்றிப்பார்த்து வியந்தனர்.
வெளிநாட்டினர்கென்யா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 46 சுற்றுலா பயணிகள் சுற்றுலாவாக இந்தியாவுக்கு வந்தனர். பின்னர் இவர்கள் ஆட்டோக்களில் சென்னையில் இருந்து கடந்த 29–ந்தேதி புதுச்சேரி புறப்பட்டனர். சென்னையில் இருந்து புதுச்சேரி சென்ற இவர்கள் பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு தஞ்சை வந்தனர்.
நேற்று காலை தஞ்சையில் இருந்து புறப்பட்ட இவர்கள் தஞ்சை பெரியகோவிலுக்கு சென்று சுற்றிப்பார்த்து வியந்தனர். பின்னர் அவர்கள் தஞ்சையில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டனர். ஆட்டோக்களை வெளிநாட்டினரே ஓட்டி வந்தனர். சுற்றுலா பயணிகள் 46 பேரும் 20 ஆட்டோக்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆட்டோக்கள் பல்வேறு வண்ணங்களில் காணப்படுகிறது.
1,000 கி.மீ. தூரம்இது குறித்து வெளிநாட்டினர் கூறுகையில், ‘‘கிராமங்களில் உள்ள மக்களின் வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்வதற்காக ஆட்டோக்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறோம். தஞ்சை பெரியகோவிலை சுற்றிபார்த்தோம். மிகவும் பிரமிப்பாக இருந்தது. அடுத்து மதுரைக்கு செல்கிறோம். பின்னர் அங்கிருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி வழியாக திருவனந்தபுரத்திற்கு 6–ந்தேதி சென்று பயணத்தை முடிக்கிறோம். 1,000 கிலோ மீட்டர் தூரம் கிராமங்கள் வழியாக நாங்கள் இந்த பயணத்தை மேற்கொள்கிறோம்’’என்றனர்.