ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் கூட்டுறவு பால் விலை உயர்வு சங்க கூட்டத்தில் தீர்மானம்


ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் கூட்டுறவு பால் விலை உயர்வு சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 1 Jan 2017 3:30 AM IST (Updated: 31 Dec 2016 8:05 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீகாளஹஸ்தி பால் கூட்டுறவு சங்கத்தினர் ஆலோசனைக்கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்க தலைவர் முனிராஜாநாயுடு தலைமைத் தாங்கினார். கூட்டத்தில் பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் சங்கரய்யா, ராமகிருஷ்ணன், அஞ்சனப்பா, ரமேஷ்பாபு, வேணுகோபால், ராமச்சந்திராரெட்டி உ

ஸ்ரீகாளஹஸ்தி,

ஸ்ரீகாளஹஸ்தி பால் கூட்டுறவு சங்கத்தினர் ஆலோசனைக்கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்க தலைவர் முனிராஜாநாயுடு தலைமைத் தாங்கினார். கூட்டத்தில் பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் சங்கரய்யா, ராமகிருஷ்ணன், அஞ்சனப்பா, ரமேஷ்பாபு, வேணுகோபால், ராமச்சந்திராரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், விவசாயிகளிடம் இருந்து லிட்டர் ரூ.26–க்கு பால் கொள்முதல் செய்யப்பட்டு, லிட்டர் ரூ.30–க்கு நுகர்வோரிடம் விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில், ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆங்கில புத்தாண்டு முதல், கூட்டுறவு பால் லிட்டர் ரூ.32–க்கு விற்பனை செய்ய, சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விலைவாசி உயர்வால் பால் விலை உயர்த்தப்பட்டதாக சங்க தலைவர் முனிராஜாநாயுடு தெரிவித்துள்ளார்.


Next Story