புதுவாழ்வு திட்டத்தின்கீழ் 179 மாற்றுத்திறறாளிகளுக்கு ஆயுள்காப்பீட்டு அட்டை கலெக்டர் ராமன் வழங்கினார்
வேலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் புதுவாழ்வு திட்டத்தின்கீழ் 179 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயுள்காப்பீட்டு அட்டையினை கலெக்டர் ராமன் வழங்கினார். ஆய்வுகூட்டம் வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், ஆலங்காயம், மாதனூர், பேரணாம்பட்டு, திமிரி ஆகிய ஊராட்சி
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் புதுவாழ்வு திட்டத்தின்கீழ் 179 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயுள்காப்பீட்டு அட்டையினை கலெக்டர் ராமன் வழங்கினார்.
ஆய்வுகூட்டம்வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், ஆலங்காயம், மாதனூர், பேரணாம்பட்டு, திமிரி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் புதுவாழ்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார்.
கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு வழங்கப்பட்ட நிதி, மகளிர் குழுக்களுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் சேவைகளுக்கு வழங்கப்பட்ட நிதி, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட தனிநபர் கடன், தொழில் கடன் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
வாகனங்கள் பழுதுபார்த்தல் பயிற்சி அளித்தது, கொத்தனார் பயிற்சி அளித்தது குறித்தும், பல்வேறு இடங்களில் நடந்த வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 246 பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தந்தது குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார். குடியாத்தம் ஒன்றியத்தில் வேளாண் உற்பத்தி பொருட்களை பசுமை காய்கனி விற்பனை மையம் மூலம் நுகர்வோர்களுக்கு நேரடியாக விற்பனைசெய்ய இடம் தேர்வு செய்தது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
179 பேருக்கு காப்பீட்டு அட்டைகூட்டத்தில் தனியார் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் புதுவாழ்வு திட்டம் செயல்படுத்தப்படும் ஒன்றியங்களில் உள்ள 179 மாற்றுத்திறனாளிகளுக்கு ‘சோலமன்’ ஆயுள் காப்பீட்டு அட்டையினை கலெக்டர் ராமன் வழங்கினார். இந்த காப்பீட்டு திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்திலுள்ள உறுப்பினர்கள் அனைவரும் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் ஒரு வருடம் வரை இலவச சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்றும், இந்த காப்பீட்டு திட்டத்திற்கு வருடத்திற்கு ரூ.357 கட்டவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட புதுவாழ்வு திட்ட மேலாளர் சம்பத்குமார், முன்னோடி வங்கி மேலாளர் தாமோதரன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சரண்யாதேவி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி, புதுவாழ்வு உதவிதிட்ட மேலாளர்கள் சாந்தி, பெரியவிநாயகம், தணிகைவேல், சுபாஷ்சந்திரன், வில்லியம்ஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.