துத்திப்பட்டு ஊராட்சியில் சுடுகாட்டை வேறுஇடத்துக்கு மாற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு


துத்திப்பட்டு ஊராட்சியில் சுடுகாட்டை வேறுஇடத்துக்கு மாற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 1 Jan 2017 4:15 AM IST (Updated: 31 Dec 2016 8:12 PM IST)
t-max-icont-min-icon

துத்திப்பட்டு ஊராட்சி காமராஜ் நகர் பகுதியில் உள்ள சுடுகாட்டை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்கீடு வேலூரை அடுத்த துத்திப்பட்டு ஊராட்சியில் உள்ள காமராஜ்நகர் பகுதியில் ஆயிரக்க

வேலூர்,

துத்திப்பட்டு ஊராட்சி காமராஜ் நகர் பகுதியில் உள்ள சுடுகாட்டை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்கீடு

வேலூரை அடுத்த துத்திப்பட்டு ஊராட்சியில் உள்ள காமராஜ்நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கென்று தனியாக சுடுகாடு கிடையாது. இதனால் இறப்பவர்களின் உடல்களை அடுக்கப்பாறை பகுதி அல்லது பாலாற்றில் புதைத்தும், எரித்தும் வந்தனர். இதனால் பல வருடங்களாக இவர்கள் சுடுகாடு வசதி கேட்டு அதிகாரிகளிடத்தில் கோரிக்கை மனு கொடுத்து வந்தனர்.

அதைத்தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காமராஜ் நகர் பகுதி மக்களுக்கு அங்குள்ள பகுதியில் சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்கி கொடுத்தனர். அதை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதுவரை இங்கு 3 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுகாட்டுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு அதன் அருகே வசிக்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் காமராஜ் நகர் பகுதியில் கடந்த 6 மாதங்களாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாட்டை நேற்று வருவாய்த்துறை அதிகாரிகள் அங்குள்ள மலைப்பகுதிக்கு மாற்றி விட்டனர். இனி அங்குதான் இறந்தவர்களின் உடல்களை புதைக்கவோ, எரிக்கவோ செய்யவேண்டும் என்றும் கூறிஉள்ளனர்.

பொதுமக்கள் எதிர்ப்பு

சுடுகாடு மாற்றப்பட்ட புதிய இடம் மலைப்பகுதி என்பதால் இங்கு பாறைகளாக உள்ளன. மேலும் கூட்டுக்குடிநீர் தொட்டி, மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி, மாரியம்மன் கோவில், கால்நடை ஆஸ்பத்திரி ஆகியவையும் உள்ளன.

யாரோ சிலர் எதிர்ப்பு தெரிவித்ததற்காக ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வந்த சுடுகாட்டை எப்படி மாற்றலாம் என்றும், கோவில் குடிநீர் தொட்டி, ஆஸ்பத்திரி இருக்கும் இடத்தில் சுடுகாடு அமைக்கக்கூடாது, பழைய இடத்திலேயே சுடுகாடு வேண்டும் என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் சென்றுவிட்டனர்.

இந்த சம்பவத்தால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story