வள்ளியூரில் ஜவுளிக்கடையில் பட்டு சேலைகள் திருட்டு 2 பெண்கள் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு
வள்ளியூரில் ஜவுளிக்கடையில் பட்டு சேலைகளை திருடிய 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
வள்ளியூர்,

ஜவுளிக்கடை
வள்ளியூர் புதிய பஸ் நிலையம் எதிரே தமிழக அரசு நிறுவனமான கோ– ஆப்டெக்ஸ் ஜவுளிக்கடை உள்ளது. புத்தாண்டு தின விற்பனையை முன்னிட்டு நேற்று வள்ளியூர் மெயின்ரோடு பகுதியில் அதிக அளவில் பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது. இந்த நிலையில் கடையின் மேலாளர் தனுஷ்கோடி வங்கியில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது ‘டிப்– டாப்‘பாக உடை அணிந்து 2 மர்ம நபர்கள் கடைக்குள் நுழைந்தனர். விலை உயர்ந்த பட்டு சேலைகளை காட்டும்படி ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி உள்ளனர். அப்போது கடைக்குள் 2 பெண்கள் நுழைந்து பணியில் இருந்த பெண் ஊழியரை அங்கும் இங்கும் அலைக்கழித்து உள்ளனர். அப்போது, 2 பெண்களும் பட்டு சேலைகளை மறைத்து எடுத்துச் சென்றுள்ளனர். இதற்கிடையே 2 மர்ம நபர்கள் கடையில் இருந்து வெளியே சென்று விட்டனர்.
4 பேருக்கு வலைவீச்சு
பின்னர் வங்கிக்கு சென்ற மேலாளர் தனுஷ்கோடி கடைக்கு வந்தார். அவர் சேலைகளை ஆய்வு செய்த போது 3 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்புள்ள 13 பட்டு சேலைகள் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது, 2 பெண்கள் பட்டு சேலைகளை திருடிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே கடைக்கு வந்த 2 மர்ம நபர்களும் அந்த பெண்களின் கூட்டாளிகள் என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து தனுஷ்கோடி வள்ளியூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை வலைவீசி தேடிவருகிறார்கள். திருட்டு போன பட்டு சேலைகளின் மதிப்பு ரூ.49 ஆயிரத்து 400 ஆகும்.

Next Story