திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்.
திருச்செந்தூர்,
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்.
ஆங்கில புத்தாண்டு
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2–ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மா£த்தாண்ட அபிஷேகம், காலை 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடக்கிறது.
மதியம் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், ராக்கால தீபாராதனை நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனை நடக்கிறது.
பாதயாத்திரை பக்தர்கள்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு கடந்த 2 நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்தனர். அவர்கள் அலங்கரிக்கப்பட்ட லோடு ஆட்டோ, மினி லாரி போன்ற வாகனங்களில் முருகபெருமானின் திருவுருவ படத்தை வைத்து, அவரது திருப்புகழ் பாடல்களை பாடியவாறு வந்தனர். ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் வந்தனர்.
பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமராஜன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story