திருச்செங்கோட்டில் ரிக்வண்டி மேலாளர் வீட்டில் நகை–பணம் திருட்டு
திருச்செங்கோட்டில் ரிக்வண்டி மேலாளர் வீட்டில் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.22 ஆயிரம் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரிக்வண்டி மேலாளர் திருச்செங்கோடு ஆறுமுகத்தான் குட்டை ஏ.கே.இ. தெருவில் வசித்து வருபவர் சம்பத்
திருச்செங்கோடு,
திருச்செங்கோட்டில் ரிக்வண்டி மேலாளர் வீட்டில் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.22 ஆயிரம் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரிக்வண்டி மேலாளர்திருச்செங்கோடு ஆறுமுகத்தான் குட்டை ஏ.கே.இ. தெருவில் வசித்து வருபவர் சம்பத்குமார். ரிக்வண்டி மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வேலைநிமித்தமாக வெளியில் சென்று விட்டார். இவரது மனைவியும் தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நள்ளிரவு நேரத்தில் சம்பத்குமாரின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், சூட்கேசில் வைக்கப்பட்டு இருந்த 3 பவுன் நகைகள் மற்றும் ரூ.22 ஆயிரம் பணத்தை திருடி சென்று விட்டனர்.
நகை – பணம் திருட்டுஇதேபோல் அவரது வீட்டின் அருகே வசித்து வந்த சம்பத்குமாரின் தாயார் ராஜம்மாளும் வீட்டை பூட்டி விட்டு, உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். அவரது வீட்டிலும் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 1 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர்.
மேலும் இவர்களின் வீடு அருகே இரு வீடுகளில் குடியிருந்தவர்கள் வேறு பகுதிக்கு சென்று விட்டதால், அந்த இரு வீடுகளும் பூட்டி வைக்கப்பட்டு இருந்தன. அந்த வீடுகளிலும் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கு நகை, பணம் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி இருப்பது தெரிய வந்தது.
இந்த தொடர் திருட்டு சம்பவம் குறித்து திருச்செங்கோடு நகர போலீசில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்த வீடுகளில் நடந்த இந்த துணிகர திருட்டு சம்பவம் நேற்று காலையில் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.