ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மூலம் அரசுக்கு ரூ.9 கோடி வருமானம்
ஊட்டி, கடந்த 2016-ம் ஆண்டில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை 28½ லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இதன் மூலம் அரசுக்கு ரூ.9 கோடி வருமானம் கிடைத்தது. சுற்றுலா தலங்கள் மலை மாவட்டமான நீலகிரியி
ஊட்டி,
கடந்த 2016-ம் ஆண்டில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை 28½ லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இதன் மூலம் அரசுக்கு ரூ.9 கோடி வருமானம் கிடைத்தது.
சுற்றுலா தலங்கள்
மலை மாவட்டமான நீலகிரியில் பல்வேறு இடங்களில் சுற்றுலா தலங்கள் உள்ளன. இதில் அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டப்பெட்டா, ரோஜா பூங்கா உள்ளிட்டவைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தவிர குன்னூர் சிம்ஸ் பூங்கா, டால்பின்நோஸ், லேம்ஸ்ராக் உள்ளிட்ட காட்சி முனைகள், கோத்தகிரி அரசு பூங்கா, முதுமலை சரணாலயம் ஆகியவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும்.
ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங் களில் கோடைக்கால சீசன் களை கட்டும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு சுற்றுலா வந்து செல்வதுண்டு. அது போல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் 2-ம் கட்ட சீசன், மழைக்காலங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்படும். மார்ச் மாதத்தில் நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மலர் கண்காட்சி, காய்கறி கண்காட்சி, குதிரை பந்தயம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ரூ.9 கோடி வருமானம்
கோடை விழாவில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க அரசு சார்பில் மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருவதன் மூலம் அரசுக்கு நல்ல வருவாய் கிடைத்து வருகிறது.
இந்த நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு கடந்த 2015-ம் ஆண்டு 26 லட்சத்து 15 ஆயிரத்து 178 பேர் வந்திருந்தனர். கடந்த 2016-ம் ஆண்டு 28 லட்சத்து 58 ஆயிரத்து 211 பேர் வந்திருந்தனர். ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு 8 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரத்து 710 ரூபாய் வருமானம் கிடைத்தது. கடந்த ஆண்டில் 9 கோடியே 13 லட்சத்து 58 ஆயிரத்து 163 ரூபாய் வருமானம் கிடைத்து உள்ளது. ஊட்டி படகு இல்லத்திற்கு கடந்த 2015-ம் ஆண்டு 15 லட்சத்து 5 ஆயிரத்து 870 பேர் சுற்றுலா வந்திருந்தனர். கடந்த 2016-ம் ஆண்டு மட்டும் 16 லட்சத்து 12 ஆயிரத்து 817 பேர் ஊட்டி படகு இல்லத்திற்கு வந்திருந்தனர். தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் ஊட்டிக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து உள்ளனர். அவர்கள் அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டப்பெட்டா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று இயற்கை காட்சிகளை கண்டு களித்தனர்.

Next Story