பொதுச்செயலாளராக சசிகலா பதவி ஏற்றதற்கு எதிர்ப்பு: கட்சி பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க. பிரமுகர்
ஈரோடு, அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்ட மீனவர் அணி செயலாளர் எஸ்.ஏ.பாரூக் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்தார். ஈரோடு பெரியார் நகரில் உள்ள அவருடை
ஈரோடு,
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்ட மீனவர் அணி செயலாளர் எஸ்.ஏ.பாரூக் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்தார். ஈரோடு பெரியார் நகரில் உள்ள அவருடைய அலுவலகத்தில் இருந்த எஸ்.ஏ.பாரூக் இதுகுறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர். இருந்தபோது நான் அ.தி.மு.க.வில் இணைந்தேன். கட்சிக்காக பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு 6 முறை சிறைக்கு சென்று உள்ளேன். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கலந்துகொண்ட பல்வேறு பொதுக்கூட்டங்களில் நான் பேசி உள்ளேன். இந்த நிலையில் சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு இல்லை. அவர் பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டதை எதிர்த்து நான் வகித்து வந்த ஈரோடு மாநகர் மாவட்ட மீனவர் அணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்து கட்சியின் தலைமைக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். மேலும், அ.தி.மு.க.வை மீட்டெடுக்க ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கட்சி பதவியை ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story