திருப்பூர் மாவட்ட வழங்கல் துறை மாநில அளவில் 2-ம் இடம் பிடித்தது


திருப்பூர் மாவட்ட வழங்கல் துறை மாநில அளவில் 2-ம் இடம் பிடித்தது
x
தினத்தந்தி 1 Jan 2017 4:00 AM IST (Updated: 1 Jan 2017 2:51 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர், குடிமைப்பொருள் நகர்வு, விற்பனையை ஆன்-லைன் மூலம் கண்காணிக்கும் பணியில் திருப்பூர் மாவட்ட வழங்கல் துறை மாநில அளவில் 2-ம் இடம் பெற்றுள்ளது. ரேஷன் கார்டுகள் திருப்பூர் மாவட்டத்தில் 9 தாலுகாக்கள் உ

திருப்பூர்,

குடிமைப்பொருள் நகர்வு, விற்பனையை ஆன்-லைன் மூலம் கண்காணிக்கும் பணியில் திருப்பூர் மாவட்ட வழங்கல் துறை மாநில அளவில் 2-ம் இடம் பெற்றுள்ளது.

ரேஷன் கார்டுகள்

திருப்பூர் மாவட்டத்தில் 9 தாலுகாக்கள் உள்ளன. இங்குள்ள 9 குடிமைப்பொருள் வழங்கல் அலுவலகங்களுக்கு உட்பட்டு 1,135 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில் 6 லட்சத்து 95 ஆயிரத்து 241 ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் சிறியவர்கள், பெரியவர்கள் என்று மொத்தம் 22 லட்சத்து 22 ஆயிரத்து 285 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த ரேஷன் கார்டுகள் நேற்றுடன் காலாவதியாகி விட்டன. இதனால், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை ஓராண்டுக்கு இந்த ரேஷன் கார்டுகளை புதுப்பித்து உள்தாள்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணிகள் இன்று முதல் அந்தந்த ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ளன.

60 சதவீதம்

மாவட்டத்தில் மொத்தம் உள்ள ரேஷன் கார்டுகளில் 86 சதவீத கார்டுகளில் செல்போன் எண் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் மொத்தம் உள்ள பெயர்களில் 18 லட்சத்து 6 ஆயிரத்து 306 பேரின் ஆதார் விவரங்கள் ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதில் 81 சதவீதம் கார்டுகளில் குடும்பத்தில் உள்ள ஒரு சிலரின் ஆதார் விவரம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

60 சதவீதம் கார்டுகளில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் விவரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 35 சதவீத கார்டுகளில் ஒருவரின் ஆதார் விவரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 18 ஆயிரத்து 745 ரேஷன் கார்டுகளில் ஆதார் விவரமோ, செல்போன் விவரமோ பதிவு செய்யப்படவில்லை. இதனால் இந்த ரேஷன் கார்டுகள் குறித்து அதிகாரிகள் தனியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

மாநில அளவில் 2-ம் இடம்

மேலும் கடந்த மாதம் 97 சதவீதம் விற்பனை ஆன் -லைன் பதிவு மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தவிர நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து ரேஷன் கடைக்கு குடிமைப்பொருட் களை கொண்டு செல்வது (நகர்வு) முதல் அவற்றை விற்பனை செய்து, அதன் விவரங்களை ஆன்- லைனில் பதிவு செய்து கண்காணிப்பதில் திருப்பூர் மாவட்ட வழங்கல் துறை மாநில அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளது. முதல் இடத்தை ஈரோடு மாவட்டம் பெற்றுள்ளது.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story