கடன் தொகையை செலுத்திய பிறகும் மீண்டும் கேட்டு மிரட்டல்; டீக்கடைகாரர் தற்கொலைக்கு முயற்சி


கடன் தொகையை செலுத்திய பிறகும் மீண்டும் கேட்டு மிரட்டல்; டீக்கடைகாரர் தற்கொலைக்கு முயற்சி
x
தினத்தந்தி 1 Jan 2017 4:15 AM IST (Updated: 1 Jan 2017 3:34 AM IST)
t-max-icont-min-icon

முசிறி பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரபிரகாஷ் (வயது 49). இவர் முசிறி புதிய பஸ்நிலையத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் குளித்தலை அண்ணாநகரை சேர்ந்த ரமேஷ் (40) என்பவரிடம் தனது மகள் படிப்பு மற்றும் குடும்ப செலவுக்காக ரூ.20 ஆயிரம் வட்டிக்கு கடன் வா

முசிறி பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரபிரகாஷ் (வயது 49). இவர் முசிறி புதிய பஸ்நிலையத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் குளித்தலை அண்ணாநகரை சேர்ந்த ரமேஷ் (40) என்பவரிடம் தனது மகள் படிப்பு மற்றும் குடும்ப செலவுக்காக ரூ.20 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். அதன் பின்னரும் அவர் ஒரு சிறியதொகையை கடனாக வாங்கியுள்ளார். இதனையடுத்து சந்திரபிரகாஷ் தான் வாங்கிய கடன் அனைத்தையும் திருப்பி கொடுத்து விட்டாராம். அதன்பின்னரும் ரமேஷ், அவரது உறவினர்கள் கிருஷ்ணவேணி (40), கிருஷ்ணவேணியின் கணவர் விஸ்வநாதன் (50), சுப்பிரமணி (40) ஆகிய 4 பேரும் சேர்ந்து கடந்த 30–ந்தேதி முசிறி உழவர்சந்தை அருகே நடந்து சென்று கொண்டிருந்த சந்திரபிரகாசை ஆபாசமாக திட்டி, நீ வாங்கிய கடனுக்கு அசல், வட்டி சேர்த்து ரூ.2 லட்சம் தர வேண்டும், என்றும், டீக்கடை மற்றும் வீட்டு சாவியை பூட்டி காலி செய்து விடவேண்டும் என்று கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் மனம் உடைந்த சந்திரபிரகாஷ் பூச்சி மருந்தை குடித்து மயங்கினார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு முசிறியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் முசிறி இன்ஸ்பெக்டர் ஆனந்த், சப்–இன்ஸ்பெக்டர் அம்பிகா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, ரமேஷ், கிருஷ்ணவேணி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story