அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்பு: அரியலூரில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்பு: அரியலூரில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 31 Dec 2016 10:22 PM GMT (Updated: 2017-01-01T03:52:16+05:30)

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்பு: அரியலூரில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தாமரைக்குளம்,

அ.தி.மு.க.வின் புதிய பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்று கொண்டதை அடுத்து, அரியலூரில் கட்சி நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைந்ததையொட்டி, அக்கட்சியில் பொதுச் செயலாளர் இடம் காலியாக இருந்தது. இதையடுத்து சென்னையில், அக்கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து நேற்று அ.தி.மு.க. அலுவலகத்தில் சசிகலா பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதனால் மகிழ்ச்சியடைந்த அரியலூர் மாவட்ட அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

இனிப்பு வழங்கினர்

அரியலூர் பஸ் நிலையம் முன்பு மாவட்ட அவைத்தலைவர் கணேசன் தலைமையில் திரண்ட அ.தி.மு.க.வினர் அங்கு உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணிச் செயலாளர் சங்கர், மாவட்ட மீனவரணி செயலாளர் நாகராஜ், நகர செயலாளர் கண்ணன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அக்பர்ஷெரீப், மாவட்ட கழக பொருளாளர் அன்பழகன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story