புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கியது ஆணையர் பார்வையிட்டார்


புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கியது ஆணையர் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 1 Jan 2017 4:02 AM IST (Updated: 1 Jan 2017 4:02 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கருவேல மரங்களை அகற்றும் பணியை ஆணையர் பார்வையிட்டார். மதுரை ஐகோர்ட்டு உத்தரவு கடந்த நவம்பர் மாதம் மதுரை ஐகோர்ட்டு கிளை மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் உள்ள கருவேல மரங்களை 8 வாரத்திற்குள் அகற்ற

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கருவேல மரங்களை அகற்றும் பணியை ஆணையர் பார்வையிட்டார்.

மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கடந்த நவம்பர் மாதம் மதுரை ஐகோர்ட்டு கிளை மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் உள்ள கருவேல மரங்களை 8 வாரத்திற்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான இடங்களில் உள்ள கருவேல மரங்களை அவர்களே அகற்றி கொள்ள வேண்டும் என நகராட்சியின் சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது.

கருவேல மரங்கள் அகற்றம்

இதைப்போல அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கப்பட்டு நகராட்சி பணியாளர்கள் தீவிரமாக அதில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட செல்லப்பாநகரில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான பூங்காவில் உள்ள கருவேல மரங்களை அகற்றும் பணி பொக்ளின் எந்திரத்தின் உதவியுடன் நடைபெற்றது. இந்த பணிகளை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராஜாராம் நேரில் பார்வையிட்டு பூங்காவில் உள்ள அனைத்து கருவேல மரங்களையும் வேருடன் அகற்ற வேண்டும் என நகராட்சி பணியாளர்களிடம் கேட்டு கொண்டார். அப்போது நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பிருந்தா உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story