சிறந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் அறிவிப்பு


சிறந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் அறிவிப்பு
x
தினத்தந்தி 31 Dec 2016 10:54 PM GMT (Updated: 2017-01-01T04:24:07+05:30)

நாகர்கோவில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டு

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஓய்வூதியத்தொகை

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று, தற்போது நலிவடைந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியத்தொகை வழங்கப்படுகிறது.

அதற்கு குறைந்தபட்ச தகுதியாக சர்வதேச, தேசிய அளவு விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும், இப்போட்டிகளில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பள்ளி, கல்லூரி காலங்களில் சாதனை படைத்தவர்கள் மட்டுமே தகுதி பெறுவர். அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுச் சங்கங்களினால் நடத்தப்பட்ட விளையாட்டுப்போட்டிகளில் கலந்துக் கொண்டிருக்க வேண்டும். குமரி மாவட்டத்தை சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்கள் 2016-ம் ஆண்டிற்கான ஓய்வூதியத்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

31-ந் தேதிக்குள்...

முதியோருக்கான போட்டிகள் மற்றும் அழைப்புப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதியில்லை. 2016-ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியன்று 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரால் சான்றொப்பமிடப்பட்ட, விளையாட்டுச் சான்றிதழ் நகல்கள், வருமானச் சான்று நகல், வயது குறித்த சான்று நகல் ஆகியவை கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

மத்திய அரசின் விளையாட்டு வீரருக்கான ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் மத்திய, மாநில அரசின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. ஓய்வூதியப் படிவத்தை எச்சூழ்நிலையிலோ, அடிப்படையிலோ, நிராகரிக்கவோ அல்லது தள்ளுபடி செய்யவோ தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு உரிமை உண்டு.

ஓய்வூதியத்தொகை பெறுவதற்கான விண்ணப்பப்படிவங்கள் ரூ.10 கொடுத்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்கள் வருகிற 31-ந் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறியுள்ளார்.

Next Story