ராணுவ வீரர் மனைவியிடம் 5½ பவுன் நகையை பறித்தவர் பிடிபட்டார்
தென்தாமரைகுளம், அகஸ்தீஸ்வரம் அருகே ராணுவ வீரர் மனைவியிடம் 5½ பவுன் நகையை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய திருடனை, வாலிபர்கள் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர
தென்தாமரைகுளம்,
அகஸ்தீஸ்வரம் அருகே ராணுவ வீரர் மனைவியிடம் 5½ பவுன் நகையை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய திருடனை, வாலிபர்கள் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நகை பறிப்பு
அகஸ்தீஸ்வரம் அருகே சமாதானபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). இவருடைய மனைவி செல்வகுமாரி (35). இவர்களுக்கு 2 மகனும், 1 மகளும் உள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் செந்தில்குமார் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். செல்வகுமாரி குழந்தைகளுடன் சமாதானபுரத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று காலை 10 மணிக்கு கண்ணன் குளத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக செல்வகுமாரி அகஸ்தீஸ்வரம் பஸ் நிலையம் நோக்கி நடந்து சென்றார். பூஜைப்புரைவிளை முந்திரி தொழிற்சாலை பகுதியில் சென்ற போது, மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென செல்வகுமாரியின் கழுத்தில் கிடந்த நகைகளை பறித்தார். இதில் 5½ பவுன் மதிப்புள்ள ஒரு நகை திருடனின் கைக்கு சென்றது.
திருடன் தப்ப முயற்சி
உடனே திருடன் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வேகமாக கிளம்பினான். நகையை பறிகொடுத்த செல்வகுமாரி திருடன், திருடன் என கத்தினார். சத்தத்தை கேட்டு அருகில் உள்ள ஒரு வீட்டில் பெயிண்ட் அடித்து கொண்டிருந்த அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த சாரதி என்ற வாலிபர், அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதில் ஏறி திருடனை விரட்டினார்.
அவர் பின்னால் மேலும் சில வாலிபர்கள் வந்தனர். 1 கிலோ மீட்டர் தூரம் திருடனை துரத்திய போது, திருடனின் மோட்டார் சைக்கிளை சாரதி நெருங்கினார். திருடன், சாரதியின் மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்தார். இதனால் சாரதி கீழே விழுந்தார். அதே சமயத்தில் நிலைதடுமாறி திருடனும் கீழே விழுந்து விட்டான்.
வாலிபர்கள் மடக்கினர்
சுதாரித்து கொண்ட சாரதி, பின்னால் வந்த வாலிபர்கள் உதவியுடன் திருடனை மடக்கி பிடித்து உதைத்தனர். பிறகு திருடனை தென்தாமரைகுளம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், பெண்ணிடம் நகையை பறித்தவர் சொத்தவிளையை சேர்ந்த முத்துக்குமார் (27) என்பதும், இவர் மீது ஏராளமான திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர். 5½ பவுன் நகையும் மீட்கப்பட்டது.

Next Story