சிவகங்கை, காரைக்குடியில் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்
சிவகங்கை, காரைக்குடியில் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
சிவகங்கை,
தி.மு.க. செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்து இந்தக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்சிவகங்கை நகர் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் அவைத்தலைவர் மதார் தலைமையில் நடந்தது. முன்னாள் நகரசபை தலைவர் சாத்தையா முன்னிலை வகித்தார். நகர செயலாளர் துரைஆனந்த் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் அழகர்சாமி, நகர் துணைச்செயலாளர்கள் ராமநாதன், சரவணன், மாவட்ட பிரதிநிதிகள் ஜெயகாந்தன், ரமேஷ், நிர்வாகிகள் அயூப்கான், வைரமணி, சோமன், கண்மணி, தமிழரசன், ஜெயக்குமார், காளீஸ்வரன், அருண்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க.வின் செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலினுக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி வருகிற 20–ந் தேதி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்துவது என்றும், தி.மு.க.வைச் சேர்ந்த சரவணராஜா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஜல்லிக்கட்டுஇதேபோன்று, காரைக்குடியில் தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் வைத்தியநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார் முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் தென்னவன், பெரியகருப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் ஆகியோர் பேசினர். முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் பள்ளத்தூர் கே.எஸ்.ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க. செயல் தலைவரான மு.க.ஸ்டாலினுக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி பொங்கல் விழாவின் போது ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.