ராமேசுவரம் கோவிலில் ரூ.32¼ லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்


ராமேசுவரம் கோவிலில் ரூ.32¼ லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்
x
தினத்தந்தி 13 Jan 2017 4:30 AM IST (Updated: 12 Jan 2017 8:44 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணி கணக்கிடப்பட்டது

ராமேசுவரம்,

. இதில் கோவில் இணை ஆணையர் செல்வராஜ் தலைமையில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், உதவி ஆணையர்கள் பாலகிருஷ்ணன், ராமசாமி, ஆய்வாளர் முருகானந்தம், மேலாளர் லட்சமிமாலா, சூப்பிரண்டுகள் ககாரின்ராஜ், பாலசுப்பிரமணியன், ராஜாங்கம், பேஸ்கார்கள் கலைச்செல்வன், செல்வம் மற்றும் கோவில் பாணியாளர்கள், எஸ்.பி.ஏ. அரசு பள்ளி மாணவிகள் பங்கேற்றனர். இதில் ரூ.32 லட்சத்து 35 ஆயிரத்து 871 ரொக்கம், தங்கம் 30 கிராம், வெள்ளி 3 கிலோ 950 கிராம் பக்தர்கள் காணிக்கையாக கிடைத்திருந்தது.


Next Story