கோலத்தை அழித்ததை கண்டித்ததால் ஆத்திரம் வாலிபரை தாக்கியவர் கைது
ராமநாதபுரம் அருகே உள்ள பேராவூர் கிழக்கு பகுதியை சேர்ந்த கருப்பையா என்பவருடைய மகன் முருகன்(வயது36). இவருடைய மனைவி ரமேஸ்வரி
ராமநாதபுரம்,
இவர் தனது மகளுடன் வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தாராம். அப்போது அந்த பகுதியில் வந்த சிலர் கோலத்தை அழித்துள்ளனர். இதனை ரமேஸ்வரி கண்டித்துள்ளார். ஆனால், அந்த வாலிபர்கள் தரக்குறைவாக பேசியதோடு, மீண்டும் கோலத்தை அழித்தார்களாம். இதுகுறித்து ரமேஸ்வரி, கணவர் முருகனிடம் கூறியுள்ளார். வீட்டின் வெளியே வந்த முருகன் அந்த வாலிபர்களை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் உருட்டு கட்டையால் முருகனை தாக்கினார்களாம். இதில் படுகாயமடைந்த முருகன் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் அடிப்படையில் கேணிக்கரை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்குபதிவு செய்து கொத்தவரங்காசவுந்திரபாண்டியன் என்பவரை கைது செய்தார். மேலும், இதுதொடர்பாக அழகுசுந்தரம், அமல்ராஜ், சுரேஷ், குணசேகரன், சுதர்சன் உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.