நாமக்கல்லில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு இருசக்கர வாகனம் முதல் அனைத்து வாகனங்களுக்கும் பதிவு கட்டணம், புதுப்பித்தல் கட்டணம், உரிமம் பெறும் கட்டணம், ஒப்பந்த கட்டணம்
நாமக்கல்,
இந்த கட்டண உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் நாமக்கல் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணை செயலாளர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சந்திரசேகரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் ஆட்டோ சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜன், பொருளாளர் ஜெயராமன் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
Next Story