மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதா? தமிழக–கேரள எல்லை வனப்பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரம்


மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதா? தமிழக–கேரள எல்லை வனப்பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரம்
x
தினத்தந்தி 13 Jan 2017 4:30 AM IST (Updated: 12 Jan 2017 11:24 PM IST)
t-max-icont-min-icon

மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதா? என்று தமிழக–கேரள எல்லை வனப்பகுதியில் நேற்று போலீசார் தீவிர தேடுதல்

மசினகுடி,

மாவோயிஸ்டுகள்

நீலகிரி மாவட்டம் கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளது. இதனால் நீலகிரி மாவட்ட எல்லைக்குள் மாவோயிஸ்டுகள் புகுந்துவிடாமல் இருக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் நக்சல்தடுப்பு பிரிவு போலீசார் தேடுதல் வேட்டையிலும், தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தமிழக–கேரள எல்லையில் உள்ள மஞ்சூர், கெத்தை, கிண்ணக்கொரை, பாட்டவயல், சீகூர், சிங்காரா போன்ற இடங்களில் நக்சல் தடுப்பு போலீசார், உள்ளூர் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தேடுதல் வேட்டை

இந்த நிலையில் மசினகுடி அருகே உள்ள தமிழக–கேரள எல்லை வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதா? என்று நேற்று அதிரடிப்படையினர், நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், மசினகுடி போலீசார் தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த தேடுதல் வேட்டை தனிப்பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையில் நடைபெற்றது.

மசினகுடி அருகே உள்ள மாயார் பள்ளத்தாக்கு வனப்பகுதி, பெல்மின்கட்டி, காங்கிரஸ் மட்டம், மங்கலப்பட்டி ஆகிய இடங்களில் நவீன துப்பாக்கிகளுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று காலை தொடங்கிய தேடுதல் பணி மாலை வரை நீடித்தது. இது குறித்து போலீசார் கூறுகையில், மசினகுடி அருகே உள்ள தமிழக–கேரள எல்லை வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதா? என்று தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்தது. இதில் மாவோயிஸ்டுகள் நடமாட்டத்துக்கான எந்தவித அறிகுறியும் இல்லை. எனினும் தேடுதல் பணி அடிக்கடி நடத்தப்படும் என்று கூறினார்கள்.


Next Story