வால்பாறையில் குடியிருப்பு பகுதிக்குள் குட்டிகளுடன் புகுந்த காட்டு யானைகள் பொதுமக்கள் பீதி
வால்பாறையில் குடியிருப்பு பகுதிக்குள் காட்டுயானைகள் குட்டிகளுடன் புகுந்தன.
வால்பாறை,
குட்டிகளுடன் வந்த காட்டு யானைகள்
வால்பாறை வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் வால்பாறை அருகே சிங்கோனா எஸ்டேட் வனப்பகுதிக்குள் முகாமிட்டிருந்த காட்டுயானைகள் குட்டிகளுடன், நேற்று முன்தினம் அரசு கல்லூரியின் 2-ம் பிரிவு கல்லூரி வளாகத்திற்குள் புகுந்தன.
பின்னர் அந்த காட்டுயானைகள் கல்லூரி வளாகத்தில் இருந்த 4 வகுப்பறைகள், பேராசிரியர்களின் அறையின் கதவு ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தின. மேலும் துதிக்கையை உள்ளே விட்டு வகுப்பறையில் இருந்த நாற்காலி, மேஜைகளை உடைத்தன. உடைந்த கதவுகள் வழியாக குட்டியானை உள்ளே புகுந்து வகுப்பறையில் இருந்த நோட்டு புத்தகங்களை கிழித்து நாசப்படுத்தின.
பின்னர் அந்த காட்டுயானைகள் அங்கிருந்து டேன்டீ அரசு ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் நுழைய முயன்றன. இதை பார்த்து ஆஸ்பத்திரி பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வனத்துறையினர் சைரனை ஒலிக்கச் செய்து காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் அந்த காட்டுயானைகள் கூட்டம் இரவு முழுவதும் வனப்பகுதிக்குள் முகாமிட்டு நின்று கொண்டிருந்தன.
இதற்கிடையில் காட்டு யானைகள் கூட்டம், எஸ்டேட் தோட்ட அலுவலகத்தின் கதவையும், குழந்தைகள் காப்பகத்தின் கதவையும், லாசன் தேயிலைத் தொழிற்சாலையின் பாதுகாப்பு கம்பி வேலியையும் உடைத்து சேதப்படுத்தின.
பள்ளிகளின் அருகே நின்றன
இந்த நிலையில் காட்டு யானைகள் 2 கூட்டமாக பிரிந்து நேற்று காலையில் சிங்கோனா எஸ்டேட் 2-வது பிரிவு குடியிருப்புக்கு அருகில் உள்ள தேயிலைத் தோட்ட பகுதியில் முகாமிட்டன. பின்னர், சிங்கோனா எஸ்டேட் அரசுஉயர்நிலைப்பள்ளிக் கூடத்திற்கு அருகே ஒரு யானை கூட்டமும், சிங்கோனா எஸ்டேட் அரசுநல தொடக்கப்பள்ளிக் கூடத்திற்கு பின்னால் ஒரு யானை கூட்டமும் நின்று கொண்டிருக்கிறது. இதனால் பள்ளிக்கூட ஆசிரியர்கள் மாணவ- மாணவிகளை வகுப்பறைகளுக்குள் பாதுகாப்பாக வைத்து பாடம் நடத்தினார்கள்.
தேயிலை தோட்டத்தின் அருகே காட்டுயானைகள் வந்த போது தொழிலாளர்கள் தொழிற்சாலை பகுதியில் பாதுகாப்பாக நின்று கொண்டனர். மேலும் குடியிருப்புக்கு அருகிலேயே யானைகள் நிற்பதால் எஸ்டேட் தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் மானாம்பள்ளி வனத்துறையின் வேட்டைத்தடுப்பு காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story