பொங்கல் பண்டிகையையொட்டி கோவைக்கு கரும்பு வரத்து அதிகரிப்பு பணபுழக்கம் இல்லாததால் விற்பனை சரிவு
பொங்கல் பண்டிகையையொட்டி கோவைக்கு கரும்பு வரத்து அதிகரித்துள்ளது.
கோவை
கரும்பு வரத்து அதிகரிப்பு
பொங்கல் பண்டிகையையொட்டி கோவைக்கு வெளி மாவட்டங்களில் இருந்து லாரி லாரியாக கரும்பு வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திண்டுக்கல், சேலம், சங்ககிரி, மதுரை, மேலூர், கடலூர், விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து நேற்று முன்தினம் இரவு 40 லாரிகளில் கரும்பு ‘லோடு’ கள் வந்தன. அவை அனைத்தும் உக்கடம் பழைய மீன் மார்க்கெட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த லாரிகளில் இருந்து கரும்பு கட்டுகள் இறக்கி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை சில்லறை வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.
இதுகுறித்து கரும்பு வியாபாரிகள் கூறியதாவது:-
கோவைக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கரும்பு வரத்து அதிகரித்துள்ளது. 6 சக்கரம் உள்ள லாரிகளில் 400 கட்டுகளும், 10 சக்கரம் உள்ள லாரிகளில் 600 முதல் 650 கட்டுகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒரு கட்டில் 20 கரும்புகள் உள்ளன. ஒரு கட்டு கரும்பு விலை மொத்த விற்பனையாக ரூ.400 வரை விற்கிறோம். அதை உள்ளூர் வியாபாரிகள் வாங்கி சென்று ஒரு கரும்பு ரூ.50 வரை விற்பார்கள்.
விலை குறைந்தது
கரும்பு விளைவித்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தான் விற்பனைக்காக கோவைக்கு கொண்டு வந்துள்ளோம். லாரிகளில் கொண்டு வரப்பட்டுள்ள கரும்பை இறக்கி வைத்து வியாபாரம் செய்ய முடியாது. லாரிகளில் வைத்து அப்படியே தான் விற்கிறோம். லாரி காலியானால் தான் லாரியை சொந்த ஊருக்கு ஓட்டி செல்ல முடியும், அதுவரை லாரிகள் இங்கு தான் நிற்கும்.
கரும்பு விளைச்சலை பொறுத்தவரை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகம் தான். இதனால் கோவைக்கு கரும்பு வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் விலையை பொறுத்தவரை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாக தான் உள்ளது. கடந்த ஆண்டு சில்லறை விலையில் ஒரு கரும்பு ரூ.70 வரை விற்றது. ஆனால் இந்த ஆண்டு ரூ.50-க்கு தான் விற்கிறது. இன்றும்(வெள்ளிக்கிழமை) மேலும் 50 முதல் 70 லாரி கரும்பு லோடு கோவைக்கு வர உள்ளது.
பண புழக்கம் இல்லை
கரும்பு விற்பனை குறைவுக்கு காரணம் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் மக்களிடம் பணபுழக்கம் குறைந்தது தான். மக்களிடம் பொருட்கள் வாங்கும் அளவிற்கு பணம் இல்லை. இதன் காரணமாக விற்பனை சரிந்துள்ளது. இது தவிர ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைக்கு அரசே கரும்பு கொடுத்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும்பாலானவர்கள் கரும்பு வாங்க முன்வருவதில்லை. ரேஷன் கடைக்கு கொடுப்பதற்கு கரும்பு வியாபாரிகளிடமே அரசு நேரடியாக கொள்முதல் செய்திருந்தால் எங்களுக்கு விற்பனை அதிகரித்திருக்கும். ஆனால் தற்போது விற்பனை சரிந்துள்ளது.
வெளி மாவட்டங்களிலிருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ள கரும்பு முழுவதும் விற்ற பின்னர் தான் எதிர்பார்த்த அளவு லாபம் வரும். இல்லையென்றால் லாரி வாடகை, ஆள் கூலி உள்பட பல்வேறு செலவுகளினால் நஷ்டம் தான் ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story