சிதம்பரத்தில் வாலிபர், தூக்குப்போட்டு தற்கொலை அக்காள் திட்டியதால் விபரீத முடிவு


சிதம்பரத்தில் வாலிபர், தூக்குப்போட்டு தற்கொலை அக்காள் திட்டியதால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 13 Jan 2017 4:30 AM IST (Updated: 13 Jan 2017 12:53 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் அக்காள் திட்டியதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிதம்பரம்,

மது குடித்து வந்தார்

சிதம்பரம் அண்ணாமலைநகர் அருகே உள்ள சி.கொத்தங்குடிதோப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் கஜேந்திரன் (வயது22). இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த கஜேந்திரனை அவரது அக்காள் லட்சுமி, திட்டியதாக கூறப்படுகிறது.

தற்கொலை

இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட கஜேந்திரன் வீட்டின் மேற்கூரையில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர், கஜேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து லட்சுமியின் கணவர் ஜோதிமணி அண்ணாமலை நகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story