விவேகானந்தர் பிறந்தநாள்: புதுவையில் பா.ஜ.க.வினர் ஊர்வலம்


விவேகானந்தர் பிறந்தநாள்: புதுவையில் பா.ஜ.க.வினர் ஊர்வலம்
x
தினத்தந்தி 13 Jan 2017 4:00 AM IST (Updated: 13 Jan 2017 2:31 AM IST)
t-max-icont-min-icon

விவேகானந்தரின் பிறந்தநாளையொட்டி பாரதீய ஜனதா கட்சி சார்பில் புதுவை ராஜா தியேட்டர் சந்திப்பு அருகில் இருந்து நேற்று ஊர்வலம் புறப்பட்டது.

புதுச்சேரி,

இந்த ஊர்வலத்துக்கு இளைஞர் அணி பொதுச்செயலாளர் மோகன் கமல் தலைமை தாங்கினார்.

ஊர்வலத்தை பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஊர்வலம் நேரு வீதி, மிஷன் வீதி வழியாக கவர்னர் மாளிகையை அடைந்தது. அதைத்தொடர்ந்து விவேகானந்தருக்கு புதுச்சேரியில் சிலை அமைக்கக்கோரி நிர்வாகிகள் கவர்னருக்கு மனு கொடுத்தனர்.

Next Story