ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு
ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
ஈரோடு,
அந்தியூர்
அந்தியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டுறவு வங்கியின் செயலாளர் கந்தசாமி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். அந்தியூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கே.பி.எஸ்.ராஜா பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கினார். கூட்டுறவு சங்க தலைவர் ரமேஷ், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் சிவக்குமார், கூட்டுறவு சங்க அதிகாரிகள், பணியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.
இதேபோல் அந்தியூர் தொகுதிக்கு உள்பட்ட அத்தாணி, கள்ளிப்பட்டி, தவுட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளுக்கு அந்தியூர் தாசில்தார் ஷீலா தலைமை தாங்கினார். இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் இலவச வேட்டி சேலைகள் வழங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் முனுசாமிநாயுடு, மீனாட்சி சுந்தரம், முன்னாள் கவுன்சிலர் ஏ.கே.வெங்கடாசலம், வேங்கையன், சின்னதம்பிபாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் சின்னமாரநாயக்கர், ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணை தலைவர் ரேவதி சண்முகவேல் உள்பட பலர் கலந்துகொண்டார்கள்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அருகே உள்ள கோணமூலை ஊராட்சியில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோணமூலை ஊராட்சி முன்னாள் தலைவர் பத்மினி சண்முகம் முன்னிலை வகித்தார். பவானிசாகர் எம்.எல்.ஏ. ஈஸ்வரன் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கினார். சத்தி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வி.சி.வரதராஜ், கோணமூலை ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர் மணிகண்ட சங்கர், செண்பகபுதூர் ஊராட்சி செயலாளர் ரகு உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.
மாணிக்கம்பாளையம்
அம்மாபேட்டை அருகே உள்ள மாணிக்கம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மாணிக்கம்பாளையம் புதூர், குதிரைக்கல் மேடு, சுள்ளிமேடு, குரும்பபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. மாணிக்கம்பாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் குஞ்சுகவுண்டர் என்கிற எம்.பி.பாலசுப்பிரமணியம் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கினார். கூட்டுறவு சங்க இயக்குனர்கள் எஸ்.சக்திவேல், சங்க செயலாளர், கிராம நிர்வாக அதிகாரி உள்பட பணியாளர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.
நம்பியூர்
நம்பியூர் அருகே உள்ள செட்டிபாளையம் கூட்டுறவு சங்கத்தில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவரும், எலத்தூர் பேரூராட்சி அ.தி.மு.க. செயலாளருமான முருகேசன் கலந்து கொண்டு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பால் சொசைட்டி தலைவர் சந்திரசேகர், கட்சி நிர்வாகிகள் சந்திரன், தனபால், சுப்ரமணியம், கருப்பணன், நஞ்சப்பன், பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கொடுமுடி
கொடுமுடி அருகே சாலைப்புதூர் சந்தைமேட்டில் உள்ள சமுதாயக்கூடத்தில் பொங்கல் பரிசு பொருட்கள், விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி தலைமை தாங்கினார். விழாவில் சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 400 பேருக்கு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினார். விழாவில் ஒன்றிய செயலாளர் புதூர் கலைமணி, முன்னாள் பேரூராட்சி தலைவர் சரவணன், மனோகரன், முன்னாள் தக்கார் கே.எஸ்.சுப்பிரமணியம், பரிமளாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story